உள்ளூர் செய்திகள்

2 வது நாளாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சேவியர் பால்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரெத்தினவேல் பாண்டியன், செயலாளர் ஜஸ்டின், துணை செயலாளர் உமா, பொருளாளர் ஆரோக்கியராஜ், சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேட்ரிக்ஏங்கல்ஸ் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் 340 ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்