உள்ளூர் செய்திகள்

2ம் நாளாக போராட்டம் ஆசிரியர்கள் 900 பேர் கைது

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள், 10 ஆண்டுகளாக தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர்.கோரிக்கை நிறைவேற்றப்படாததால், இடைநிலை ஆசிரியர்கள் நேற்று முன்தினம் முதல், மீண்டும் தொடர் போராட்டத்தை கையில் எடுத்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்தில் ஈடுபட்ட 350 ஆசிரியைகள் உட்பட 750 பேரை, போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இதேபோல, நேற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 400 ஆசிரியைகள் உட்பட, 900 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.கோரிக்கைக்கு தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என, இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்