உள்ளூர் செய்திகள்

21ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலக நான்காவது தளம் அறை எண்: 439ல் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும், 21ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை, 10:30 மணி முதல் நடைபெறும் முகாமில், தனியார் துறை நிறுவனத்தினர் பங்கேற்று, தேவையான பணியாளர்களை தேர்வு செய்கின்றனர். எழுதப்படிக்க தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ.,  டிப்ளமோ, தையல் பயிற்சி பெற்று வேலை தேடுவோர் முகாமில் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்கும் வேலை அளிக்கும் நிறுவனத்தினரும், வேலை தேடுவோரும், www.tnprivatejobs.tn.gov.in என்கிற இணையதளத்தில் முன்பதிவு செய்யவேண்டும். விவரங்களுக்கு, 0421 2999152, 94990 55944 என்கிற எண்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்