உள்ளூர் செய்திகள்

22,000 ஆடியோ பதிவிட்டு அரசு பள்ளி மாணவர் சாதனை

வீரபாண்டி: சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம், ரெட்டிமணியக்காரனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், கல்வி வானொலியில், 22,000க்கும் மேற்பட்ட ஆடியோக்களை பதிவிட்டு, ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.இதுகுறித்து அப்பள்ளி இடைநிலை ஆசிரியையான, ஆன்லைன் கல்வி வானொலி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துமாரி, 43 கூறியதாவது:கடந்தாண்டு வரை, இப்பள்ளி மாணவர்கள் மட்டும் தமிழகத்தில் அதிகபட்சமாக, 22,453 ஆடியோக்களை பதிவு செய்தனர். இதை, ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம், உலக சாதனையாக அறிவித்து, அந்த புத்தகத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.இது, தலைமை ஆசிரியை மல்லிகா உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்