உள்ளூர் செய்திகள்

24 மணி நேர ஸ்டிரைக்; ஐ.எம்.ஏ., விளக்கம்

ஈரோடு: இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ.,) ஈரோடு மாவட்ட தலைவர் சரவணன், செயலாளர் அரவிந்தகுமார் வெளியிட்ட அறிக்கை: கொல்கத்தாவில் பெண் டாக்டர்கள் கொலையை கண்டித்து, தேசிய அளவில் டாக்டர்கள் இன்று (17ம் தேதி) ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்த இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.இதன்படி ஈரோடு மாவட்டத்தில், இந்திய மருத்துவ சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள, 1,200 டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். காலை, 6:00 மணி முதல் 18ம் தேதி காலை, 6:00 மணி வரை, 24 மணி நேரம் போராட்டம் நடக்கிறது. சங்க தமிழ்நாடு தலைவர் அபுல்ஹசன் தலைமை வகிக்கிறார். இப்போராட்ட காலத்தில் புறநோயாளிகள் பார்வை அனுமதி இல்லை. மிக அவசர தேவைகளில் இருக்கும் நோயாளிகளை மட்டும், தொடர்புடைய மருத்துவமனை டாக்டர்கள் அவசர சிகிச்சை அளிப்பர். உள் நோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சை வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்