உள்ளூர் செய்திகள்

24 லட்சம் மாணவர்களுக்கு இலவசக் கண்ணாடிகள்

இத்தகவலை துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். அகர்வால் கண் மருத்தவமனை சம்பந்தட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், 1972ம் ஆண்டில் முதல்வராக கருணாநிதி இருந்த போது ஏழை எளியவர்கள் பயன் பெறும் வகையில் இலவச கண்பரிசோதனை முகாம்களை நடத்தியதைச் சுட்டிக்காட்டினார். முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான கடந்த ஜூன் 3ம் தேதியன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் படிக்கும் 24 லட்சம் மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்