24 ஆண்டுக்கு பின் பி.எட்., படிப்பு!
சென்னை பல்கலையில், 1999ம் ஆண்டு வரை பி.எட்., படிப்பு தொலைநிலையில் நடத்தப்பட்டது. அதன்பின் பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., உத்தரவால் நிறுத்தப்பட்டது. தற்போது, யு.ஜி.சி., மற்றும் ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ.,யின் அனுமதி கிடைத்துள்ளதால், 24 ஆண்டுகளுக்கு பின், பி.எட்., படிப்பில், மீண்டும் மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.ஒரு குழுவுக்கு தலா 500 பேர் வீதம், இரண்டு குழுக்களாக 1,000 பேர் சேர்க்கப்படுவர். பல்கலையின் தொலைநிலை கல்வி பிரிவின், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையத்தில் விண்ணப்பங்களை பெற்று, ஆக., 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆங்கில வழியில் இந்த படிப்பு நடத்தப்படும். என்.சி.டி.இ., விதிகளின்படி, கல்வித் தகுதி பெற்றவர்கள் இந்த படிப்பில் சேர்க்கப்படுவர். பட்டதாரி ஆசிரியர்களும் சேரலாம் என சென்னை பல்கலை துணை வேந்தர் கவுரி தெரிவித்தார்.