உள்ளூர் செய்திகள்

25 ஆண்டுக்கு பின் சந்தித்த மாணவர்கள்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1995 முதல் 2001 வரை படித்த முன்னாள் மாணவிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து பள்ளி தாளாளர் ராமதாஸ், பள்ளி தலைவர் பாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் செல்வராணி, ஆசிரியர்களை கவுரவப்படுத்தினர். 'மூழ்காத ஷிப்பே... பிரென்ட் ஷிப் தான்...' என்ற பாடல் வரிகளை ஒன்றிணைந்து பாடி தங்களை நட்புணர்வை வெளிப்படுத்தினர். ஏற்பாடுகளை முன்னாள் மாணவிகள் விஜயலட்சுமி, வளர்மதி சண்முக ரேவதி, மெர்சிராணி, சரவண பிரியா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்