டிச.29ல் குழந்தைகள் பக்தி நடனம்
மதுரை: மதுரை திருப்பாலை திருவெம்பாவை இசைப்பள்ளி சார்பில் மார்கழி மாதத்தை முன்னிட்டு தினமும் பாவை வகுப்பு நடந்து வருகிறது.டிச.,29 மதியம் 3:00 மணிக்கு அனைத்து மாதர், ஆடவர் பஜனைக்குழுவினர் பங்கேற்கும் அஷ்டபதி பஜனை திவ்ய நாமம் நடக்கிறது. அதை தொடர்ந்து வடக்குமாசிவீதி தருமபுர ஆதின சொக்கநாதர் திருமண மண்டபத்தில் நிருத்யாலயாவின் பெண் குழந்தைகளின் பக்தி நடனம் நடக்கிறது.ஏற்பாடுகளை பாவைப்பள்ளி தலைவி விசாலாட்சி தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.