உள்ளூர் செய்திகள்

3 மத்திய பல்கலை. துணைவேந்தர்கள் மீது விசாரணை

நிதிகளைப் பயன்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் தொடர்பாக மத்திய மனித வள அமைச்சகம் உண்மையைக் கண்டறியும் குழுக்களை அமைத்துள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி. புரந்தேஸ்வரி மாநிலங்களவையில் தெரிவித்தார். நாகாலந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், விஸ்வபாரதி ஆகிய பல்கலைக்கழகங்களை சேர்ந்த துணைவேந்தர்கள் மீது பல்கலைக்கழக மானியக் குழுவிற்கும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைசகத்திற்கும் புகார்கள் வந்தன. இதையடுத்து உண்மையைக் கண்டறியும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட புரந்தேஸ்வரி, மத்தியப் பல்கலைக்கழகங்களின் நிதிக் கணக்குகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும்  தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்