30 சதவீத சீன மக்கள் தாய்மொழி பேசுவதி்ல்லை
பீஜிங்: சீனாவின் அலுவலக மொழியான மாண்டரின் மொழியை சுமார் 30 சதவீத மக்கள் பேசுவதி்ல்லை என அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் கூறுகையில் மாண்டரின் மொழியை மேம்படுத்துவதற்கு அதிக அளவில் முதலீடு தேவைப்படு்கிறது என கூறினார். கடந்த 1998-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரம் மாண்டரி்ன் மொழியை ஊக்குவிக்கும் நடைமுறையை கடைபிடித்து வருகிறது. இந்தாண்டு நாட்டின் உட்புற பகுதிகள் மற்றும் தொலை தூர பகுதிகளில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.