30 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
மங்களூரு; &'&'மாநிலத்தின், ஜி.எஸ்.டி., வருவாயை, 30 சதவீதமாக அதிகரிக்கும் வகையில், ஐந்தாண்டுகளில், 30 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்,&'&' என, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா தெரிவித்தார்.&'மங்களூரு புதிய கண்டுபிடிப்புகள்&' என்ற மாநாட்டை, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, நேற்று, துவக்கி வைத்தார்.பின், அவர் பேசியதாவது:பெங்களூரு நகரம் பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் தாயகம். அந்த வகையில், தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, குடகு ஆகிய மாவட்டங்களை கொண்டு, மங்களூரை தொழில்நுட்ப முனையமாக மாற்றப்படும். வேகமாக வளர்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எதிர்காலத்தில், தகவல் தொழில்நுட்ப நகரமாக மாற்றி மங்களூரிலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி வகை செய்யப்படும்.சிறந்த சுற்றுச்சூழல், சுற்றுலா, சிறந்த கல்வி முறை ஆகியவை கவனத்தில் கொண்டு, மங்களூரை புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பதில் சர்வதேச மையமாக மாற்றப்படும். இத்துடன், எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் மேம்பாடு, புதிய தொழில் முனையம் அமைக்கப்படும். பெங்களூரு நகரை தவிர, 2 ம் கட்ட நகரங்கள் வளர்ச்சியடைய புதிய திட்டங்கள் தீட்டப்படும். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஊக்கப்படுத்தப்படும். மாநிலத்தின், ஜி.எஸ்.டி., வருவாயை, 30 சதவீதமாக அதிகரிக்கும் வகையில், 5 ஆண்டுகளில், 30 லட்சம் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.