30 கி.மீ., பரதம் ஆடி 100 மாணவியர் சாகசம்
மாமல்லபுரம்: செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில், விநாயகா நாட்டியாலயா பரத நாட்டிய பயிற்சியகம், தங்கள் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, உலக சாதனை படைக்கும் நோக்கில் ஈடுபட்டது.அதன்படி நேற்று, 100க்கும் மேற்பட்ட நாட்டியாலயா மாணவியர், பரத நடனமாடியே மாமல்லபுரம் - செங்கல்பட்டு இடையே, 30 கி.மீ., சென்றனர். அமெரிக்க நாட்டின் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் என்ற அமைப்பின் முன்னிலையில், இந்நிகழ்வு நடந்தது.மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் அருகில், வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் அமைப்பின் பதிவாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட், நாட்டியாலயா நிறுவனர் மீனாட்சிபிரியா ராகவன், காலை 5:10 மணிக்கு, இந்நாட்டிய நிகழ்வை துவக்கி வைத்தனர்.