உள்ளூர் செய்திகள்

ஏப்.30 வரை புத்தக கண்காட்சி

மதுரை: தமிழ்நாடு காந்தி நினைவு நிதி சார்பில் காந்திய இலக்கிய சங்கம் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு காந்தி மியூசியத்தில் புத்தக கண்காட்சி துவங்கியது.கல்வி அலுவலர் நடராஜன் வரவேற்றார். சங்கத்தலைவர் சந்திரபிரபு தலைமை வகித்தார். மீனாட்சி கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் யாழ் சந்திரா முதல் விற்பனையை தொடங்கி வைக்க பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு பெற்றுக் கொண்டார். பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.காந்திய சிந்தனை கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி, காந்திய கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய முதல்வர் தேவதாஸ் கலந்து கொண்டனர். ஏப்.,30 வரை தினமும் காலை 10:00 முதல் 5:30 மணி நடக்கும் கண்காட்சியில் தள்ளுபடி உண்டு. அனுமதி இலவசம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்