உள்ளூர் செய்திகள்

38 பல்கலை ஊழியர்கள் ஒரே நாளில் மாற்றம்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் துணைப்பதிவாளர் முதல் உதவியாளர்கள் வரை 38 பேர் ஒரே நாளில் நேற்று பணியிடம் மாற்றப்பட்டனர். இப்பல்கலையில் தொலைநிலைக் கல்வி உட்பட பல்வேறு துறைகளில் துணை மற்றும் உதவி பதிவாளர்கள், கண்காணிப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் பலர் பல ஆண்டுகளாக ஒரே துறையில் பணியாற்றுவதாக சர்ச்சை எழுந்தது. சில ஊழியர்கள் மீது சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை என்பது உட்பட பல்வேறு புகார்கள் துணைவேந்தர் கல்யாணிக்கு சென்றன. இதுகுறித்து விசாரித்த பல்கலை நிர்வாகம் 38 பேரை ஒரே நாளில் வெவ்வேறு துறைகளுக்கு மாற்றி உத்தரவிட்டது. இதில் மூன்று பேர் வெளியூர்களில் உள்ள உறுப்புக் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். திருமங்கலம், கோட்டூர், ஆண்டிபட்டி உறுப்புக் கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதை திரும்பப் பெற்று பல்கலைக்குள் வேறு துறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என துணைவேந்தரிடம் ஊழியர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்