உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு

திருப்பூர்: 'நீட்' போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியருக்கான பாராட்டு விழா, நாளை (27ம் தேதி) நடக்கிறது. இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து, 'நீட்' தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா, நாளை பள்ளி வளாகத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி வரவேற்கிறார். மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர். வெற்றி அறக்கட்டளை தலைவர் சிவராம் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்