உள்ளூர் செய்திகள்

குருக்சேத்ரா தொழில்நுட்ப விழா

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியின் தொழில்நுட்ப குழு ஆண்டுதோறும் நடத்தும் 'குருக்சேத்ரா' எனும் தொழில்நுட்ப விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.யுனெஸ்கோவின் ஆதரவைப் பெற்ற ஒரு சர்வதேச தொழில்நுட்ப விழாவான 'குருக்சேத்ரா', பண்டைய இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலான பேரழிவுப் போரின் நினைவாக பெயரிடப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு முதல் மாணவர்களால் நடத்தப்பட்டு வரும் இந்த விழாவில், மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தவும், தொழில்நுட்பம் மற்றும் கணிதத்தின் மீதான ஆர்வத்தை வளர்க்கும் விதமாகவும் பல்வேறு மாநாடு மற்றும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிரிவுகள்: கடல்சார் தொழில்நுட்பம், பிளாக் செயின், சைபர் பாதுகாப்பு, கல்வி தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கோடிங், ரோபாடிக்ஸ் உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.போட்டிகள் நடைபெறும் நாட்கள்: பிப்ரவரி 20 முதல் 23 வரை.விபரங்களுக்கு: www.kurukshetraceg.org.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்