உள்ளூர் செய்திகள்

40 கி.மீ., அலையும் பேரையூர் மாணவர்கள்

பேரையூர்: பேரையூரில் அரசு கல்லுாரி இல்லாததால் தினமும் 40 கி.மீ., பயணித்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.இத்தாலுகாவில் 23 அரசு, உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 முடித்து வெளியேறுகின்றனர். இப்பகுதியில் கல்லுாரி இல்லாததால் தொழில் நுட்பக் கல்வி பயில மதுரைக்கும், கலைக் கல்லுாரிக்கு கப்பலுாருக்கும், ஐ.டி.ஐ.,க்கு மதுரை புதுாருக்கும் செல்கின்றனர்.நீண்ட துாரம் செல்ல வேண்டியுள்ளதால் மாணவிகள் பலர் பிளஸ் 2வுடன் படிப்பை நிறுத்திக்கொள்கின்றனர். மாணவர்கள் பலர் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் 'அதைச் செய்வோம், இதைச் செய்வோம்' என்று கூறுவதோடு சரி. மாணவர்களின் நலன் கருதி பேரையூரில் கலைக்கல்லுாரி, பாலிடெக்னிக் அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்