441 பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகள்
ஆர்.கே.பேட்டை: மாணவர்கள் 441 பேருக்கு மடிக்கணினிகளை, அரக்கோணம் தொகுதி எம்.பி., அரி, வழங்கினார். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனுார், அம்மையார்குப்பம், விடியங்காடு உள்ளிட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர்கள் இலங்கேஸ்வரன், விநாயகம் உள்ளிட்டோர் வரவேற்றனர். விழாவில், அரக்கோணம் தொகுதி எம்.பி., அரி, கலந்து கொண்டு, 441 மாணவ, மாணவியருக்கு மடிக்கணினி வழங்கினார். அம்மையார்குப்பம் அரசு பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்டுவதற்காக, 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும் என, அறிவிக்கப்பட்டது.வங்கனுார் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் வேண்டும் என, பி.டி.ஏ., உறுப்பினர், நீலகண்டன் எம்.பி.,யிடம் மனு அளித்தார்.