உள்ளூர் செய்திகள்

50 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய சிட்டி குரூப் முடிவு!

அடுத்த மூன்று மாதங்களில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்த வங்கியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டில் ஏற்கெனவே, 23 ஆயிரம் ஊழியர்களுக்கு ஊதியமில்லாத விடுமுறை (லே-ஆப்) அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் வங்கிப் பணியாளர்களின் எண்ணிக்கை 3.75 லட்சத்திலிருந்து 3 லட்சமாகக் குறையும். வங்கியின் செலவுகளை 16 சதவீதத்திலிருந்து 19 சதவீதம் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், வங்கியின் சில சொத்துகளை விற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் வங்கியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நான்கு காலண்டு நிதிக் கணக்குகளின்படி தொடர்ச்சியாக வங்கி இழப்பைச் சந்தித்து வருவதை அடுத்து, நிலைமையைச் சரி செய்ய இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்க வங்கிகள் இதுவரை 1.5 லட்சம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்