6,7,8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை: அமைச்சர்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இன்றைய சூழலில் 6,7,8 ம் வகுப்புகளுக்கு இன்றைய சூழலில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை. பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 98.5 சதவீதமாக உள்ளது.9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் இல்லை. அதற்கு பதில் 6 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு உதவியுடன் டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.