உள்ளூர் செய்திகள்

70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை

புதுடில்லி: பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 70ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் மோடி இன்று (ஜூலை 22) வழங்குகிறார்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் எனப்படும் திட்டத்தை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது 75 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். அதன்படி, கடந்த ஜூன் மாதம் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு காணொலி வாயிலாக பணி நியமன ஆணையை பிரதமர் வழங்கினார். இந்நிலையில் இன்று நடக்க உள்ள நிகழ்ச்சியில் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்