உள்ளூர் செய்திகள்

7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டத்தை நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தக்கோரி மதுரை மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் மனு செய்துள்ளனர். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அவர்கள் &'சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் விரைவில் முடிவெடுக்க வேண்டும். பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது முடிவெடுக்க மேலும் அவகாசம் தேவையா. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் விரைவில் முடிவெடுக்க வேண்டும்.இதுபோன்ற சூழல்கள் வராது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என சட்டம் நிறைவேற்றப்பட்டது. அரசமைப்பு பொறுப்பில் இருப்பவர்கள் பதிலளிக்கும் அளவுக்கு நடந்து கொள்ளமாட்டார்கள்&' என்றனர். அரசு தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில், &'இதுபோன்ற முடிவுகளில் நீதிமன்றத்துக்கு பதிலளிக்க தேவையில்லை. முடிவெடுக்க போதுமான கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என விதிகள் உள்ளன&' என்றார்.அதற்கு நீதிபதிகள் &'கவர்னருக்கு உத்தரவிடவோ, காலக்கெடு விதிக்கவோ முடியாது என்பது நீதிமன்றத்துக்கும் தெரியும். விதிப்படி அவர் எந்த நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவ சியமில்லை. இருப்பினும் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு பள்ளி மாணவர்கள் எதிர்காலம் கருதி மிக விரைவாக முடிவெடுக்க வேண்டும். அவர் மனசாட்சிக்கு விடையளிக்க வேண்டும்&' என்றனர்.மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், &'கர்நாடகாவில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு 15 சதவீதம், கன்னட மொழியில் பயின்ற மாணவர்களுக்கு 5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது&' என்றார்.அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர், &'கர்நாடகாவில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு தான் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை&' என்றார். நீதிபதிகள், &'கிராம மாணவர்கள் பெரும்பாலும், அரசுப்பள்ளிகளிலேயே பயில்கின்றனர். அவர்களின் நலனுக்காகவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது&' என்றனர்.அரசு தலைமை வழக்கறிஞர், &'தமிழகத்தில் முதன்முதலாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடுவழங்கி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிபதி கலையரசனின் அறிக்கையில், அரசுப்பள்ளி மாணவர்கள் பலர் வேலை செய்து கொண்டு கல்வி பயில்வதாக தெரிவித்துள்ளார்&' என்றார்.நீதிபதிகள், &'அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ஒதுக்கீடு மசோதா மீது விரைவில் முடிவெடுக்க வேண்டும். இந்த ஆண்டாவது மருத்துவ கல்லூரிகளில் 300 முதல் 400 அரசுப்பள்ளி மாணவர்கள் சேர வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கம்&' என்றனர்.பின் அரசு தலைமை வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதையடுத்து, விசாரணையை நவ. 2-க்கு ஒத்திவைத்து, &'அன்று இந்த விவகாரத்தில் நல்ல முடிவு தெரியவரும் என நீதிமன்றம் நம்புகிறது&' என நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்