75 லட்சம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
சமூக நலன் கர்நாடகாவில் 75 லட்சம் மாணவர்களுக்கு 2,676 கோடி ரூபாயில் கல்வி உதவித்தொகை; 2,231 மாணவர்களுக்கு 389 கோடி ரூபாய் கல்வி கடன் வழங்கப்பட்டு உள்ளது. 18 லட்சம் மாணவர்களின் 1,273 கோடி ரூபாய் கல்வி கட்டணம் திருப்பி செலுத்தப்பட்டு உள்ளது.கர்நாடகாவில் 1,258 உறைவிடப் பள்ளி, 300 மவுலானா ஆசாத் பள்ளியின் 13.30 லட்சம் மாணவர்கள் கல்விக்காகவும், மாநிலம் முழுதும் 5,306 விடுகளுக்காக, 15,081 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.மானியம் அடிப்படையிலான சிறு நிறுவனங்கள் மூலம், தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதால், அவர்களுக்கு நிலையான வருமானத்தை உருவாக்கி, பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.'ஸ்வலாம்பி சாரதி' திட்டத்தின் கீழ், 8,195 பயனாளிகளுக்கு 249 கோடி ரூபாயும்; கங்கா கல்யாணா திட்டத்தின் கீழ், 21,556 பயனாளிகளுக்கு 637 கோடி ரூபாயும்; 2,928 பயனாளிகளுக்கு 421 கோடி ரூபாயில் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.