7,500 தற்காலிக ஊழியர்கள் பணி நிரந்தரம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சரான உணவு மற்றும் உணவு பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், நேற்று இரண்டாவது நாளாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.அவர் கூறுகையில், "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகத்தில், 14 ஆண்டுகளாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள், 7,500 பேரை பணி நிரந்தரம் செய்ய, பட்டியல் அளித்துள்ளனர்.முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். நெல்மணிகள் வீணாவதை தடுக்க தேவையான அளவு கிடங்குகள் அமைக்கப்படும். கிடங்குகள் அமைக்க, தருமபுரம் ஆதீனம் சார்பில் நான்கு பகுதிகளில் இடம் வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது," என்றார்.