8 நாட்கள் முடிவில் 27,287 பேர் ஒதுக்கீடு பெற்றனர்!
ஜுலை 14ம் தேதியுடன், பொதுப்பிரிவு கவுன்சிலிங் தொடங்கி 8 நாட்கள் நிறைவடைந்த நிலையில், 35,716 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் 8305 பேர் வரவில்லை மற்றும் வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 124 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. இறுதியாக, ஒதுக்கீடு பெற்றவர்கள் 27,287 பேர். ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 23.25%. எட்டாவது நாளில் மட்டும் 4,607 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், வராதவர்கள் 1,324 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 12 பேர். ஆப்சென்ட் விகிதம் 28.74%. இறுதியாக, ஒதுக்கீடு பெற்றவர்கள் 3,271 பேர். தொழிற்பிரிவு கவுன்சிலிங் தொழிற்பிரிவு கவுன்சிலிங்கின் 6 நாட்கள் முடிவில், 2,305 பேர் அழைக்கப்பட்டு, 1,838 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். வராதவர்களின் எண்ணிக்கை 459 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 8 பேர். யாரும் நிராகரிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 19.91%.