88,106 மாணாக்கர்கள் சேர்க்கைப் பெற்றனர்
அழைப்புக் கடிதம் அனுப்பியும் 26,946 பேர் கவுன்சிலிங் வரவில்லை. 262 பேர் வந்தும், எதையும் தேர்வு செய்யவில்லை. வராதோர் எண்ணிக்கை சதவீதம் 23.37% என்ற அளவில் உயர்ந்துள்ளது. இடங்கள் கூடிக்கொண்டே வருகையில், எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் பாடத்தை அதிகபட்சமாக 20,430 மாணாக்கர்கள் தேர்வு செய்துள்ளனர். 18,294 மாணவர்களுடன், மெக்கானிக்கல் பிரிவு இரண்டாமிடத்தில் உள்ளது. தமிழ் மீடியப் பாடப்பிரிவுகளைப் பொறுத்தவரை, மெக்கானிக்கல் பிரிவை 227 பேரும், சிவில் பிரிவை 247 பேரும் தேர்வு செய்துள்ளனர். சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளை இதுவரை 76,869 மாணாக்கர்கள் தேர்வு செய்துள்ளனர். அண்ணாப் பல்கலையை 6,684 பேர் தேர்ந்தெடுத்துள்ளனர். 4,553 பேர் அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.