900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் முழுதும் தடை
சென்னை: அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் இன்ஜினிரிங் கல்லுாரிகளில், பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இந்த விவகாரத்தில் மூன்று பேர் குழு அறிக்கையின்படி, முறைகேட்டில் ஈடுபட்ட 295 கல்லுாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், 900 பேராசிரியர்கள், வாழ்நாள் முழுதும் கல்லுாரிகளில் பணியாற்ற தடை விதிக்கவும், கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், பல்கலை சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.