உள்ளூர் செய்திகள்

அறிவிப்பு

முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஜாம் என்ற நுழைவுத் தேர்வு, அடுத்த ஆண்டு பிப்.,11ல் நடத்தப்படும் என, சென்னை ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு, செப்.,5ல் துவங்கி, அக்.,13ல் முடிகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர், எம்.எஸ்சி., - எம்.டெக்., - எம்.எஸ்., - எம்.எஸ்சி.,யுடன் இணைந்த பிஎச்.டி., உள்ளிட்ட படிப்புகளில் சேரலாம். விபரங்களை, https://jam.iitm.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்._____________சென்னை வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேற்று காலை கவர்னர் மாளிகை வளாகத்தில் உள்ள லட்சுமி தோட்டத்தில், ருத்ராட்ச மரக்கன்றை நட்டார். கவர்னர் ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்._____________தமிழகத்தில், 2,500க்கும் மேற்பட்ட தட்டச்சு பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. புதிதாக, 1,611 தட்டச்சு பயிற்சி மையங்களுக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அங்கீகாரம் அளித்துள்ளது. புதிய நிறுவனங்கள் உரிய கட்டமைப்பு மற்றும் தகுதியான பயிற்சியாளர்களுடன் செயல்பட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது._____________வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்:கடந்த, 30 நாட்களில் மட்டும், மூன்று வெவ்வேறு சம்பவங்களில், தமிழகத்தின் 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் வாடும், 19 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து, அவர்களை தாயகம் அழைத்து வர, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்