போட்டி
லண்டனில் செயல்படும் தி எக்கானமிஸ்ட் பத்திரிகை, உலகம் முழுதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல், பொருளாதாரம், உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் போட்டி நடத்தியது.ஆன்லைன் வாயிலாக நடந்த போட்டியில், மண்ணிவாக்கம் ஸ்ரீ நடேசன் வித்யாசாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி சுமையா பர்வீன், குளோபல் டிஸ்கஷன் மாணவர் விருது மற்றும் ஸ்டான்ட் பாயின்ட் விருது வென்றார். பள்ளியின் முதல்வர் ஆனந்தி மணி, முதன்மை முதல்வர் காயத்ரி ராமச்சந்திரன் ஆகியோர் பாராட்டினர்.