கருத்தரங்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர்நிலை பல்கலையின் கணினி அறிவியல் பயன்பாட்டு துறை சார்பில், 'எலைட் 2கே 26' தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நேற்று நடந்தது.பல்கலை துணைவேந்தர் முனைவர் ஸ்ரீனிவாசு, இணை துணைவேந்தர் முனைவர் வசந்த்குமார் மேத்தா, ஸ்பெக்ட்ரம் 7 டெக்னாலஜிஸ் மேனேஜரிங் டைரக்டர் சித்தார்த், ரேபிட் கோ குரூப் சி.இ.ஓ., ருக்மணி நட்ராஜ் ஆகியோர் கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டுத் துறை தலைவர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்.கணினி அறிவியல் மாணவ, மாணவியர் தற்போதைய சூழலில் வேலை வாய்ப்பு மேலும் இணையம் மற்றும் இணையவலை பாதுகாப்பு என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர்கள் கருத்தரங்க உரையாற்றினர்.இதில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. துறைத் தலைவர் ரமேஷ் பரிசு வழங்கினார்.