உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கோவில் நிதியில் ரிசார்ட் கட்டுவதா? : அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு

கோவில் நிதியில் ரிசார்ட் கட்டுவதா? : அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு

பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவில் நிதியிலிருந்து 14 கோடி ரூபாய் எடுத்து, ஊட்டியில், 'ரிசார்ட்' கட்டும் அறநிலையத்துறை திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலையில், பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, 17 அடி உருவமாக அம்மன் சயன கோலத்தில் அருள்புரிகிறார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.இத்தகைய சிறப்புமிக்க கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தொகை 100 கோடி ரூபாய், வங்கியில், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது.அந்த பணத்தில் இருந்து 14 கோடி ரூபாய் எடுத்து, ஊட்டியில் காந்தல் வட்டத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே, 'ரிசார்ட்' கட்ட, அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. அங்குள்ள பழைய குடியிருப்புகள் அகற்றப்பட்டு, புதிய குடியிருப்புகளும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.மாசாணி அம்மன் கோவில் நிதியை எடுத்து, ஊட்டியில் ரிசார்ட் கட்டும் முடிவுக்கு, அக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அவர்களின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத அதிகாரிகளை தேர்வு செய்து, அவர்களை இங்கு நியமித்து, ரிசார்ட் கட்டும் பணியை துவக்க, அறநிலையத்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாக பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.இது, பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உள்ளூரைச் சேர்ந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஏற்பாட்டில் தான், இந்த அதிகாரி மாற்றம், விடுதி கட்டும் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.அதிகாரிகளின் தவறான வழிகாட்டுதலும், ரிசார்ட் கட்டும் விவகாரமும், தி.மு.க., ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.கவர்னர், முதல்வர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ள பக்தர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும், ரிசார்ட் கட்டும் திட்டத்தை நிறுத்தவும் வலியுறுத்தி உள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

N Sasikumar Yadhav
மார் 08, 2025 16:21

இந்துசமய துரோக துறை ஒரு கோவிலைக்கூட புதியதாக கட்ட வக்கில்லாதவனுங்க இப்பதான் கொள்ளையடிக்க ரிசார்ட்டு கட்டுகிறானுங்க . இதுவரை கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் எத்தனை கோயிலை கட்டியிருக்கிறானுங்க . கோயிலை இடிக்க முந்துகிறவனுங்க கோயிலை கட்ட வரமாட்டானுங்க கொள்ளைக்காரனுங்க


Balaji Radhakrishnan
மார் 08, 2025 14:17

இதை வழக்காக எடுத்து செல்ல வேண்டும். மத்திய அரசு விரைவில் திமுக அரசை அகற்ற வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.


Muralidharan S
மார் 08, 2025 11:16

திராவிஷன்களின் அராஜகத்திற்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது.. அந்த மாசாணி அம்மன்தான் இவர்களை எல்லாம் கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.. நிச்சயம் அழிந்து நாசாமாவார்கள்..


ram
மார் 08, 2025 10:59

இதற்கெல்லாம் எடப்பாடி என்ற சுயநல அரசியல் வாதியெய் காரணம். இவர் ஒழுங்காக இருந்தால் போன தேர்தலில் திருட்டு திமுக ஆட்சிக்கு வந்து இருக்காது. தேர்தலுக்கு முன் வன்னியர் இடஒதிக்கீடு என்று கொண்டு வந்து, தெற்கு பக்கம் உள்ளவர்கள் வோட்டை இழந்தார். இவர் கொண்டு வந்த இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது பிறகு. இதன்மூலம் ஜஸ்ட் இரண்டு சதவீத வோட்டு வித்தியாசத்தில் திருட்டு திமுக வெற்றி பெற்றது. இப்பவும் எவர் எதிர்க்கட்சி தலைவர் மாதிரி செயல் படவில்லை. இதிலிருந்து தெரிகிறது இவரும் திருட்டு திமுகவின் பெரிய 200 oopis . இவர் aiadmk தலைவராக இருக்கும் வரை திருட்டு திமுகவின் ஆட்களின் ஆட்டம் நிற்காது.


orange தமிழன்
மார் 08, 2025 08:28

அம்மா! தாயே........இவர்களுக்கு சரியான பாடம் புகட்டு...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை