உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., - பா.ஜ., ரகசிய உறவு: உடைக்கிறார் நடிகர் விஜய்

தி.மு.க., - பா.ஜ., ரகசிய உறவு: உடைக்கிறார் நடிகர் விஜய்

மாமல்லபுரம்: ''அரசியல் பதவிகளால் பண்ணையாராக மாறியவர்களை, அரசியலிருந்தே விரட்ட வேண்டும்,'' என, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆவேசப்பட்டார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் தனியார் அரங்கில் நேற்று நடந்தது. 'கெட் - அவுட்' என்ற கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து, அக்கட்சி தலைவர் விஜய் பேசியதாவது:அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ இல்லை என்பதை கேள்விப்பட்டுள்ளோம். அரசியலுக்கு யாரும் வரலாம்; அது ஜனநாயக உரிமை. மக்கள் விரும்பும் ஒருவன் அரசியலுக்கு வந்தால், நல்ல முறையில் தான் வரவேற்பர்.ஒரு சிலருக்கு எரிச்சல் வரும். நாம் சொன்ன பொய்யை நம்பி, மக்கள் ஓட்டு போட்டார்களே. ஆனால், இவன் சொல்வது மக்களுக்கு நெருக்கமாக உள்ளதே என்று குழப்பம் ஏற்படும். வர்றவன், போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறானே என்றும் பேசுவர். ஆட்சியில் உள்ளவர்கள் அப்படித்தான் பேசுவர். இப்படிப்பட்ட அரசியல் களத்துல பயம், பதற்றம் இல்லாமல், எதிர்ப்பை இடது கையால் புறந்தள்ளி, த.வெ.க.,வின் இரண்டாம் ஆண்டு துவங்கி உள்ளது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கட்சி துவங்கியபோது, இளைஞர்கள் தான் அவர்களுடன் இருந்தனர். அதனால் தான் அவர்களுக்கு, 1967, 1977 தேர்தல்களில் வெற்றி கிடைத்தது.த.வெ.க., எளிமையான மக்கள் கட்சி. நிர்வாகிகளும் அப்படித் தான் இருப்பர். இது பண்ணையார் கட்சியல்ல. முற்காலத்துல பண்ணையார்கள் கட்சியில் இருப்பர். இப்ப பதவிகளில் உள்ளோர் பண்ணையாராக மாறி விடுகின்றனர்.மக்கள், நாட்டு நலன் வளர்ச்சி பற்றி கவலைப்படாமல், பணம் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் செயல்படும் பண்ணையார்களை, அரசியலிலிருந்தே அகற்ற வேண்டும். அதை ஜனநாயக ரீதியில் அணுகவே, 2026 தேர்தலை சந்திக்கிறோம். எந்தக் கட்சிக்கும் த.வெ.க., சளைத்ததல்ல.இப்போது, மும்மொழி கொள்கை பிரச்னை எழுந்துள்ளது. இதை அமல்படுத்தாவிட்டால், மத்திய அரசு, மாநில அரசிற்கு கல்வி நிதி அளிக்காதாம். நிதி அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. பெற வேண்டியது மாநில அரசின் உரிமை. பா.ஜ., - தி.மு.க.,வைச் சேர்ந்தோர், தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு, 'டிராமா' போட்டு, மக்களை ஏமாற்றுகின்றனர். பா.ஜ.,வினர் அடிக்கிற மாதிரி அடிப்பராம்; தி.மு.க., அழுகிற மாதிரி அழுமாம். அதை நாட்டு மக்கள் நம்பணுமாம். இவ்வாறு அவர் பேசினார்.விழா நடந்த இடத்தில், புதிய கல்வி கொள்கை உள்ளிட்ட அவலங்களை, 'கெட் அவுட்' செய்ய உறுதியேற்போம் என்ற வாசகத்துடன் அமைந்த பதாகையில், விஜய் கையொப்பமிட்டு, கையெழுத்து இயக்கம் துவங்கினார்.ஹிந்திக்கு எதிரான விஷயம் என்பதால், வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பதாகையில் கையொப்பமிடாமல் ஒதுங்கினார்.கட்சியை நடத்துவது யார்?இந்நிகழ்ச்சியில் பேசிய பிரஷாந்த் கிஷோர், த.வெ.க.,வுக்கு அடுத்த மூன்று மாதங்களில், ஒவ்வொரு தொண்டரும் தலா 10 பேரை சேர்க்க வேண்டும் என, உத்தரவிட்டார். இது கட்சியை நடத்துவது விஜய்யா அல்லது பிரஷாந்த் கிஷோரா என்ற கேள்வியை எழுப்புகிறது.நிகழ்ச்சியில் பிரஷாந்த் கிஷோர் பேசுகையில், ''கிரிக்கெட் வீரர் தோனி, தமிழகத்தில் மிகவும் பிரபலமானவார். அடுத்தாண்டு எனது பங்களிப்புடன், த.வெ.க., வெற்றி பெற்றால், தோனியை விட தமிழகத்தில் நான் பிரபலமாகி விடுவேன். தமிழகத்தில் ஊழல், வகுப்புவாதம், குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்கு த.வெ.க.,வின் ஒவ்வொரு நிர்வாகியும், தொண்டர்களும், அடுத்த மூன்று மாதங்களில் 10 பேரை, கட்சியில் சேர்க்க வேண்டும்,'' என்றார்.***

'வெற்றி விழாவில்

தமிழில் பேசுவேன்!'தமிழகம், மேற்கு வங்கம் தேர்தலுக்கு பின், தேர்தல் வியூகம் செய்யாமல் இருந்தேன். தமிழகம் வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதை போல், ஊழலிலும் உள்ளது. லஞ்சம், வாரிசு அரசியல் இல்லையெனில், தமிழகம் மேலும் வளரும். தமிழகத்தில் உள்ளோர், மத அரசியலை வேரூன்ற விட மாட்டார்கள். இங்கு கூடியிருப்போரில் பெரும்பாலானோர் எம்.எல்.ஏ.,க்கள் ஆக்கப்படுவர். தமிழை கற்க, பேச முயற்சிப்பேன். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமர்ந்ததும் நடக்கும் வெற்றி விழாவில், தமிழில் பேசுவேன்.- பிரஷாந்த் கிஷோர், வியூக வகுப்பாளர்.

ஆடம்பர சொகுசு விடுதியில் நிகழ்ச்சி

இது ஏழைகளுக்கான கட்சி என பேச்சுத.வெ.க., இரண்டாம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள, 'போர் பாயின்ட் ஷெரட்டன்' சொகுசு விடுதியில், நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசும்போது, ''இது ஏழைகளுக்கான கட்சி,'' என்றார். ஆனால், பல லட்சம் ரூபாய் வாடகை பெறப்படும் பிரமாண்ட அரங்கில் நிகழ்ச்சி நடந்தது. இது மட்டுமின்றி, விஜய்க்கு வரவேற்பு அளிக்கும் வகையில், சாலை முழுதும் ஆங்காங்கே கட்சியினர் பேனர்கள், பிரமாண்ட கொடிகளையும் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உள்பட, 4,500 பேருக்கு சைவ உணவு பறிமாறப்பட்டது. இதில், கேரட் அல்வா, மசால் வடை, காலி பிளவர் ரோஸ்ட், பூரி, வெஜ் குருமா, வெஜ் பிரியாணி, தயிர் பச்சடி, சாதம், சாம்பார், ரசம், மோர், சவ்சவ் கூட்டு, கேரட், பீன்ஸ் பொரியல், பீன்ஸ் பருப்பு கூட்டு, புரூட் சாலட், வாழை பழம், வெண்ணிலா ஐஸ்கிரீம், ஊறுகாய், தண்ணீர் பாட்டில் பறிமாறப்பட்டன. இந்த கொண்டாட்டத்துக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவாகி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில், 'த.வெ.க., ஏழைகளுக்கான கட்சி என்று சொல்வது முரண்பாடாக உள்ளது' என அக்கட்சி தொண்டர்களே பேசுகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில், 200க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள், கட்சி நிர்வாகிகள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களிடம் கெடுபிடியாக நடந்துக் கொண்டனர். நிகழ்ச்சி நடந்த இடத்துக்குள் செல்ல முயன்ற பத்திரிகை புகைப்படக்காரரை பவுன்சிலர்கள் நெஞ்சில் குத்தியதில் அவர் கீழே சரிந்தார். பின், அவர் ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Bhakt
பிப் 27, 2025 23:35

பாஜக தேசியவாத கட்சி தீயமுக குடும்பவாத கட்சி...அது எப்டி விஜய்னா ரெண்டும் உறவு வச்சிக்க முடியும்?


Saai Sundharamurthy AVK
பிப் 27, 2025 20:33

3000 கோடி கொடுத்து இவரை இயக்குவதே திமுக தான். நாம் தமிழர் கட்சியை உடைத்து அங்குள்ளவர்களை தன் கட்சிக்குள் இழுத்துக் கொள்வது என்பது திமுகவின் ரகசிய உறவால் தான்.வி.சி.கவிலிருந்து அர்ஜுனாவை திட்டம் போட்டு விசிகவும், திமுகவும் சேர்ந்து விஜய் கட்சிக்கு அனுப்பி, அந்த கட்சியை நிர்வாகம் செய்ய அனுப்பியுள்ளார்கள். மேலும் அதிமுக, பாமக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக போன்ற கட்சியிலிருந்து அதிருப்தியாளர்களை விலைக்கு வாங்கி விஜய் கட்சியில் இணைத்து விடுவதே இந்த திமுகவின் நாடகம் தான். அதாவது தேர்தல் நேரத்தில் விஜய்யுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் எப்படியும் அதிருப்தியாளர்களின் ஓட்டும் தங்களுக்கே கிடைத்து விடும் என்கிற நம்பிக்கையில் திட்டம் தீட்டி ஸ்டாலின் செயல்படுகிறார். ஊரை ஏமாற்ற திமுகவும், பாஜகவும் ரகசிய உறவு என்று விஜய் சொல்லி திரிவது மக்களுக்கு புரியாமல் இல்லை.


Subburamu Krishnasamy
பிப் 27, 2025 17:57

One more comedy entertainer in Tamizhagam politics. No need to take him seriously. Hero worship politics will not stand for long time


srinivasan
பிப் 27, 2025 17:00

இது நல்ல நடிப்பு. ஏழைக் குழந்தைகளின் கல்வியில் விளையாடும் திமுக. அதற்கு ஜால்ரா போடும் இவன். காரணம் இவர்கள் நடத்தும் பள்ளிகள். பிஜேபி எல்லா தனியார் கல்விக் கூடங்களையும் அரசு எடுத்துக் கொள்ளும் என்று உத்தரவு போட்டால் குப்பறப் படுத்து மண்தின்பான்.


RK
பிப் 27, 2025 13:50

அடுத்த... கோமலகாசன்....


P. SRINIVASAN
பிப் 27, 2025 17:51

சரியாய் சொன்னீங்க brother.


Amjath
பிப் 27, 2025 13:47

நீ ஒரு கோமாளி..


yts
பிப் 27, 2025 13:44

முதலில் இவன் உண்மையாக இருக்க வேண்டும் இவன் நடத்தும் பள்ளியில் மட்டும் மூன்று மொழிக் கொள்கையாம் மற்றவர்களுக்கு வேண்டாமாம்


NellaiBaskar
பிப் 27, 2025 22:15

உண்மைதான். வாழ்த்துக்கள்


Oviya Vijay
பிப் 27, 2025 10:55

உங்கள் பேச்சிலிருந்து தெளிவாகத் தெரிகிறது என்னவெனில் எந்தக் காலத்திலும் நீங்கள் அதிமுக, திமுக மற்றும் பிஜேபியுடன் ஒட்டுறவாடப் போவதில்லை என்று... அதுவே மிக மிக நன்று... மேலும் நீங்கள் கூட்டணி ஆட்சி என்று அறிவித்தவுடன் உடனடியாகத் துண்டு போடக் காத்திருக்கும் துக்கடா கட்சிகளான புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தமிழருவி மணியன், விஜயகாந்த் மரணத்திற்கு பின் தேய்பிறையை நோக்கிப் போகும் பிரேமலதாவின் தலைமையிலான தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் வாசன், பாமக பெட்டி ராமதாஸ் மற்றும் சின்ன மாங்கா அன்புமணி போன்றவர்களை தூரத்தில் துரத்தியடியுங்கள்... ஏனெனில் தமிழகத்தில் அரசியல் கோமாளிகளாக உலா வரும் சீமான் மற்றும் அண்ணாமலையைப் போன்றவர்களே மேற்கண்ட கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும்... இவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. மக்கள் விரும்பும் தலைவராக நீங்கள் உங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமென விரும்பினால் மேற்கண்ட தேவையற்ற சுமைகளை நீங்கள் சுமக்காமல் தனித்திருப்பதே நலம்... அதுவே உங்களுக்கு பலம்... உங்கள் நீண்ட அரசியல் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்... தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ், மக்கள் நீதிமய்யம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகி வந்து தவெக கட்சியுடன் கூட்டணி வைத்தால் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நிகழும். இதுதான் 1996 ல் மூப்பனார் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து திமுகவுடன் கூட்டணி அமைத்து குறுகிய காலத்தில் தேர்தலை சந்தித்து யானை பலம் கொண்ட ஜெயலலிதாவையே தூக்கி எறிந்த தேர்தலைப் போன்றது. இவை தவிர்த்து பிஜேபி தலைமையிலோ அதிமுக தலைமையிலோ தமிழகத்தில் இனியும் ஆட்சி மாற்றம் நிகழும் என்று கனாக் கண்டு கொண்டிருப்பது நிஜத்தில் நடக்காத ஒன்று...


R.MURALIKRISHNAN
பிப் 27, 2025 12:00

விஜயை டோட்டலா முடித்து விடுவது என்று கங்கணம் கட்டி புறப்பட்டு விட்டார்பா


நடராஜன்,முதுகுளத்தூர்
பிப் 27, 2025 17:05

அப்பத்துக்கு மதமாறிய மிஷினரி கும்பல்களுக்கு ஜோசப் விஜய்னாலே அம்புட்டு இஷ்டம் சும்மா அவனை புகழ்ந்து வரிஞ்சி எழுதுவானுக அதிலும் இந்த ஓவியம் ஓவர் அடக்கி வாசிங்கடா அணில் குஞ்சுகளா


Rajasekar Jayaraman
பிப் 27, 2025 10:54

அப்போ இந்த ஜென்மத்தில் தமிழில் பேச முடியாது.


Sudha
பிப் 27, 2025 10:36

கருப்பை வெள்ளையாக்கும் முயற்சி, இனி பிரசாந்த் என்றாலே ஏமாற்று கூட்டம் என்ற முத்திரை யோடு விடை பெறுவார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை