உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரஷ்யாவில் நடிகர் விஜய்: தேர்தலை புறக்கணிக்க முடிவா?

ரஷ்யாவில் நடிகர் விஜய்: தேர்தலை புறக்கணிக்க முடிவா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: படப்பிடிப்புக்கு ரஷ்யா சென்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய், தேர்தலை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால், அக்கட்சியினர் அதிர்ச்சியில் உள்ளனர்.தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை, நடிகர் விஜய் பிப்ரவரி மாதம் துவங்கினார். கட்சிக்கு 2 கோடி பேரை உறுப்பினராக சேர்க்க முடிவு செய்யப்பட்டு, மொபைல் போன் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குழப்பம்

மூன்று நாட்களில், 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்ததாக தெரிவித்த கட்சி தலைமை, அதன்பிறகு நடந்த விபரங்களை இன்னும் வெளியிடவில்லை. இதனால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். வரும் 2026 சட்டசபை தேர்தல் தான் இலக்கு. அதற்கு முன் இரண்டு படங்களில் விஜய் நடிக்கவுள்ளதாக கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் கூறி வருகிறார். லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, 19ம் தேதி, தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்கவுள்ளது.ஆனால், படப்பிடிப்புக்காக விஜய், ரஷ்யாவிற்கு சென்றுள்ளார். ஏற்கனவே திட்டமிடப்பட்ட நாட்களை விட கூடுதல் நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.அதன்படி, 27ம் தேதி விஜய் சென்னை திரும்ப உள்ளதாக பட தயாரிப்பு வட்டார தகவல்கள் கூறுகின்றன. அதனால், லோக்சபா தேர்தலில் ஓட்டளிப்பதற்கு, விஜய் சென்னைக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என இரண்டு தரப்புக்கும் மாற்றாக கட்சி துவங்கியுள்ளதால், யாருக்கும் ஓட்டளிக்காமல் தேர்தலை புறக்கணிக்க, விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விஜய் கட்சியில் உறுப்பினராக இணைந்த நிர்வாகிகள், ரசிகர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

நிச்சயம் வருவார்

சர்க்கார் திரைப்படத்தில் வெளிநாட்டில் இருந்து ஓட்டு போட விஜய் வருவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால், அவரது ஓட்டை, மற்றொருவர் போட்டுவிட்டு சென்றிருப்பார். தேர்தல் கமிஷனில் போராடி, நீதிமன்றம் வரை சென்று, தன் ஓட்டை விஜய் உறுதி செய்வார். அப்படி ஓட்டுரிமைக்கு போராடும் விஜய், ஆளும்கட்சி, எதிர்கட்சி என்று பார்க்காமல், ஜனநாயக கடமை ஆற்றுவதற்கு நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில், அக்கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

விடியல்
ஏப் 15, 2024 13:38

இவனுங்களுக்கு எப்போதும் தன்னலம் தான். இதில் பிரச்சினை வந்தா ஓடி ஒளிந்து கொள்ளும் கூட்டம் தான் நடிகர்கள். விஜயகாந்த் போன்றோர் விதிவிலக்கு. மற்றபடடி காசுக்கு மாரடிக்கும் மக்களும் இவர்களும் ஒன்று தான்


அப்புசாமி
ஏப் 15, 2024 11:26

பாதுங்க விசய். ஏற்கனவே நீங்க தளபதி. ரஷ்ய ராணுவத்துல சேத்துடப் போறாங்க. நிச்சயம் ஜெயிச்சுடுவீங்கன்னு உங்க சினிமாவை பாத்து தெரிஞ்சு வெச்சிருக்காங்க வேற.


சுகு
ஏப் 15, 2024 09:18

Rush to Vote yaa... Rush to Vote yaa ... என்றதை ரஷ்யா என்று நினைத்து விட்டார்


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 15, 2024 05:32

நடிகர் தற்போதே நடிப்பை ஆரம்பித்து விட்டார் இனி என்ன நடிப்பை வெளிப்படுத்துவாரோ தெரியவில்லை மற்றொரு நடிகர் தான் நடிக்க இருப்பதாகவும் தனியாக நடிக்க போவதாகவும் யார் தோள் மீதும் கை போட்டு நடக்க மாட்டேன் என்றும் அதன் பின்னர் எப்படி தேவையோ அப்படி நடிப்பேன் என்று பேட்டி கொடுக்கிறார் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொன்னாலும் சொன்னார்கள் பணம் பத்தும் செய்யும் என்பது போல இவர்களுக்கு மன்னர் ஆக வேண்டும் என்று ஆசை வந்து விட்டது போல அறைகுறை அடைகளோடு ஒரு அறையில் ஆண் பெண் இருபாலரையும் வன்முறை தூண்டி சண்டை போட்டு நடிக்க செய்யும் பிக்பாஸ் கூட வீரா வேசத்தோடு தனியாக நடிக்க ஆரம்பித்து தற்போது ஒரே குட்டையில் ஊறும் மட்டையாகி விட்டார் மற்றொருவரோ இதோ நடிக்க வருவேன் அதோ வந்து விட்டேன் என கூவி கூவி கடைசியில் குட்டையில் மட்டையாகி போய்விட்டார் நடிகர்கள் முதலில் நடிகர் சங்கம் என்று வைத்து தங்கள் படங்களை ஓட விட்டு காசு சம்பாதித்தனர் வெறும் நடிகர் சங்கம் என்று வைத்து கொண்டு படப்பெட்டி தூக்கி சலித்து போன ரசிகர்களுக்கு ஊக்கம் அளிக்க நடிகர் நற்பணி மன்றம் என பெயர் மாற்றி பணம் சம்பாதித்தார் தற்போது டிஜிட்டல் யுகம் இதில் பெட்டி தூக்கும் வேலை இல்லை தற்போது பொருளாதார வளர்ச்சி காரணமாக இவர்கள் செய்த கண்ணாமூச்சி நற்பணிக்கும் வேலை இல்லை ஆகவே புதிய யுக்தியாக இந்த கட்சி ஆரம்பிக்கும் வேலை செய்து கொண்டு உள்ளனர் உள்ளூரில் மன்னராக ஆசைப்படும் ரசிகர்கள் தான் தற்போதைய Target இந்த கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களுக்கு இந்த உள்ளூர் மன்னராக மனக் கணக்கு போடும் பாமரன் இருக்கும் வரை இனி ஒவ்வொரு நடிகனாக கட்சி ஆரம்பிப்பார்கள் இதிலும் சலிப்பு வந்தவுடன் நடிகர்கள் வேறு ஏதாவது விளையாட்டு காட்டுவார்கள்


Ramu, CBE
ஏப் 15, 2024 07:59

Good comment with futuristic comment, anything can happen because of money. Common public should be think widely and show their action on the polling.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ