உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க.,விற்கு நேசக்கரம் நீட்டும் ராகுல்!

தி.மு.க.,விற்கு நேசக்கரம் நீட்டும் ராகுல்!

புதுடில்லி: தேர்தல் கமிஷன் பெரும் பிரச்னையில் சிக்கியுள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கும், மற்ற இரண்டு தேர்தல் கமிஷனர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்கிற செய்தியால், டில்லி அரசியலே அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்படி இதை சமாளிப்பது என தெரியாமல், பா.ஜ., திண்டாடிக் கொண்டிருக்கிறது.'ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும்' என ராகுலும், 'ஞானேஷ் குமாரை கைது செய்ய வேண்டும்' என மம்தா பானர்ஜியும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்; மற்ற எதிர்க்கட்சிகளும் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xwnumbsa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்த கரப்பான் பூச்சி கட்சியும், இந்த விவகாரத்தில் களத்தில் இறங்கியுள்ளது. ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை, போராட்டம் துவங்க முடிவெடுத்துள்ளது அந்த கட்சி.இதனால் ஆடிப்போன ராகுல், இந்த விவகாரத்தில் கரப்பான் பூச்சி கட்சி, எங்கே காங்கிரசை மிஞ்சி விடுமோ என, அச்சப்படுகிறார். தர்மேந்திர பிரதான் விவகாரத்தில் காங்கிரசும் களம் இறங்கினாலும், இதற்கான கிரெடிட் கரப்பான் பூச்சி கட்சிக்கு தான் கிடைத்தது.எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து போராட தயாராகி வருகிறார் ராகுல். இந்த விவகாரத்தில், தி.மு.க.,வும் தங்களுடன் இருக்க வேண்டும் என, விரும்புகிறாராம் ராகுல். இது தொடர்பாக கனிமொழியுடன் பேசியுள்ளாராம்.'கேரளாவில் காங்கிரசும், இடதுசாரிகளும் எதிரும் புதிருமாக இருந்தாலும், தேசிய அளவில் பா.ஜ.,வை ஒன்றாகவே இணைந்து எதிர்த்து வருகிறோம். அது போல தி.மு.க.,வும் எங்களுடன் இணைந்து செயல்படலாம்' என்கிறாராம் ராகுல்.ப தவிக்காக தி.மு.க.,வை உதறிவிட்டு, த.வெ.க., பக்கம் சென்று விட்ட காங்கிரசுக்கு உதவ தி.மு.க., தயாராக இருக்குமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Vasan
செப் 28, 2026 19:26

வாங்கி வாங்கி சிவந்த கைகளுக்கு இன்னமும் தேவை பசையுள்ள கையே தவிர நேச கையல்ல.


Venuviswanathan Pa
செப் 28, 2026 18:50

ராகுல் எண்ணம் பலிக்காது Too Late..


PVSR
செப் 27, 2026 21:39

வெட்கம் மானம் சூடு சொரணை இல்லாதவர்கள் மீண்டும் கூட்டணி போட்டு கொள்ளையடிக்க திட்டம் போடுவார்கள்


krishna
செப் 27, 2026 16:42

DESA VIRODHA MAFIA MAINO CONGRESS ADHE DESIGN ULLA THIRUTTU THIYAMUKKA DRAVIDA MODEL KUMBALUKKU AATCHI PADHAVI VERI MATTUME NAATAI SURANDI KOLLAI ADIKKA.2 PERUKKUM VEKKAM MAANAM SOODU SORANAI ENDRAAL ENNA ENDRE THERIYAADHU.


வாய்மையே வெல்லும்
செப் 27, 2026 14:50

ஒண்ணு அலிபாபாவும் நாற்பது ஈவேரா திருடர்களும் இன்னொன்னு அலிபாபாவும் மூன்று இத்தாலிய மடயர்களும் அப்படியே பதியவும் அதுதான் நியாயம் அதுதான் தர்மம்


Govi
செப் 27, 2026 14:23

அடித்து விரட்டவும்


பேசும் தமிழன்
செப் 27, 2026 14:04

இருவருக்கும் கடும் போட்டி இருக்கும் போல் தெரிகிறது.


M Ramachandran
செப் 27, 2026 12:54

இனம் இனத்தோடு சேரும். சேற்றில் சுற்றி திரியும் இனம்.


Barakat Ali
செப் 27, 2026 09:36

தி.மு.க.,விற்கு நேசக்கரம் நீட்டும் ராகுல் ..... நேசக்கரம், நேசிக்கால் அல்லது வேறு எதுன்னாலும் பற்றிக்கொள்ளும் நிலையில்தான் குடும்பக்கட்சி இருக்கு ......


ராஜா
செப் 27, 2026 09:05

சந்தர்ப்பவாதம் திமுக, காங்கிரசுக்கு கை வந்த கலை. நிருபர் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அமைதியாக இருப்பது என்ன செய்வது முழிப்பதாக அர்த்தம் இல்லை. காங்கிரஸ் தானாகவே தன் வழியை தேடிக்கொள்ளும் என்பது தான். தேர்தல் கமிஷன் மூன்று பேருடன் இன்று விலக்கம் மற்றும் அறிவிப்பு செய்துவிட்டது. காங்கிரஸ் வழக்கம் போல் முட்டு சந்தில் நுழைந்துவிட்டது.


சமீபத்திய செய்தி