உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: நிழல் பிரதமர்!

டில்லி உஷ்ஷ்ஷ்: நிழல் பிரதமர்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வெளிநாட்டு அரசியலில், 'நிழல் பிரதமர்' என எதிர்க்கட்சி தலைவரை அக்கட்சியின் தொண்டர்கள் அழைப்பது வழக்கம். தற்போது, அந்த வழக்கம் நம் நாட்டிலும் தொற்றி விட்டது. ராகுல் தான் நிழல் பிரதமர் என, காங்., கட்சியினர் பேசத் துவங்கியுள்ளனர்.லோக்சபா தேர்தலில், 99 தொகுதி களை கைப்பற்றியுள்ள காங்கிரஸ், ஏதோ ஆட்சியை பிடித்து விட்டது போலவே மகிழ்ச்சியில் உள்ளது.அத்துடன், பார்லிமென்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சரியான போட்டி கொடுத்து, 'நீட்' உட்பட பல விஷயங்களில், மோடி அரசுக்கு தலைவலி கொடுக்க ஆரம்பித்து விட்டது. 'நிழல் பிரதமர் என தன்னை அழைப்பது ராகுலுக்கு பிடித்துள்ளது; அவரும் சந்தோஷமாக உள்ளார்' என, காங்., கட்சி தலைவர்கள் கூறினாலும், கூட்டணிக்குள் இதற்கு எதிர்ப்பு உள்ளதாம்.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, நிழல் பிரதமர் வார்த்தைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'இண்டியா' கூட்டணியில் இணையாமல், தன் மாநிலத்தில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தியவர்.'நம் கட்சியில் யாரும் ராகுலை நிழல் பிரதமர் என அழைக்கக் கூடாது' என, கட்டளையிட்டுள்ளாராம். இவரைப் போலவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும், நிழல் பிரதமர் அடைமொழிக்கு எதிராக இருக்கிறாராம். ஆனால், இதைப் பற்றியெல்லாம் காங்கிரசோ, ராகுலோ கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Dharmavaan
ஜூலை 03, 2024 17:45

கொள்ளை அடிக்கும் பேராசை ராகுல்


Mohan
ஜூலை 01, 2024 13:54

ஆட்சியை பிடித்தது போல் சந்தோசமாக இருந்தது உண்மை.


vijay,covai
ஜூன் 30, 2024 22:53

உங்க கூட்டணியே விலங்கா கூட்டணி தான் இதுக்கு பேர் i.n.d.i.a


ஆரூர் ரங்
ஜூன் 30, 2024 11:24

நிழல் என்றும் நிஜமாகாது. விழல் பிரதமராக புள்ளிராஜா கூட்டணி வைத்துக் கொள்ளலாம். வேறு யாரால் வீழ்ச்சியை விரைவாக கொண்டு வரமுடியும்?


venugopal s
ஜூன் 30, 2024 10:58

இந்த மாதிரி செய்திகளையும் நம்புவதற்கு சங்கிகளால் மட்டுமே முடியும்!


பேசும் தமிழன்
ஜூன் 30, 2024 15:18

அப்போ நம்ம ஜப்பான் நாட்டு துணை முதல்வர்.... இல்லையா ???? இது என்னடா விடியலுக்கு வந்த சோதனை ?? அப்போ அவர் துணை பிரதமர் இல்லையா ???


பேசும் தமிழன்
ஜூன் 30, 2024 15:19

இது போன்ற செய்திகளை பரப்பி விடுவது... நம்ம திராவிட மாடல் ஆட்களாக தான் இருப்பார்கள் !!!


s sambath kumar
ஜூலை 01, 2024 13:42

ஓகே


Maheesh
ஜூன் 30, 2024 10:42

330 தொகுதிகளில் போட்டியிட்டு 99 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றவர்களுக்கு நிழல் பிரதமர் ஒரு கேடா?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 30, 2024 07:39

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை.


Vikram
ஜூன் 30, 2024 01:35

பாவம் இதுலயாவது கனவு காணட்டும்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை