உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: யார் அந்த சார் விவகாரத்தில் திருப்பம்!

டில்லி உஷ்ஷ்ஷ்: யார் அந்த சார் விவகாரத்தில் திருப்பம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். குற்றவாளி கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் உள்ளார். இதை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.வன்கொடுமை சம்பவம் நடந்தவுடன் எதிர்க்கட்சிகள், 'குற்றவாளி ஞானசேகரன் தொடர்பு கொண்ட அந்த சார் யார்?' என கேள்வி எழுப்பின; ஆனால், பதில் கிடைக்காத காரணத்தால் அமைதியாகின.ஆனால், அரசியல்வாதிகள் மத்தியில், 'அந்த சார் இவர்தான்' என, ஒருவரைக் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், டில்லியில் உள்துறை அமைச்சக அதிகாரிகளிடையே பரபரப்பாக ஒரு செய்தி பேசப்படுகிறது.அது, 'அரசியல்வாதிகள் மத்தியில் குறிப்பிடப்படும் அந்த நபர், உண்மையான சார் இல்லை; அவர், வேறொருவருக்கு இந்த வேலையை செய்துள்ளார்' என, சொல்லப்படுகிறது.அந்த பிரமுகர் மீது, எவருமே கை வைக்க முடியாதாம். இந்த விவகாரத்தை எப்படியோ மோப்பம் பிடித்த உளவுத்துறை, உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவித்துவிட்டதாம்.சிறப்பு புலனாய்வு குழு கூட்டத்தின்போது, ஒரு அதிகாரி, 'ஞானசேகரன் யார் யார் பெயரைச் சொல்கிறாரோ, அவர்களையெல்லாம் வழக்கில் சேர்த்துவிடுவேன்; யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்' என்றாராம். இதனால் என்ன நடக்குமோ?' என, அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அச்சத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

subramanian
மார் 10, 2025 23:08

ஆக அந்த பெண்ணின் மானம் கப்பலேறியதுதான் மிச்சம் மிச்சம்.


Venkatesan Srinivasan
மார் 10, 2025 16:29

இது போன்ற


Ramesh Sargam
மார் 09, 2025 20:10

யார் அந்த சார்? சீக்கிரம் அந்த சார் பிடிபடவேண்டும். அவன் கூட்டாளிகளும் பிடிபடவேண்டும். அவர்கள் எந்த கொம்பனாக இருந்தாலும் சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். இவை அனைத்தும் குறுகிய காலத்தில் நடைபெறவேண்டும். நோ ஜாமீன், நோ டிலே இந்த கோர்ட் விசாரணை.


saravan
மார் 09, 2025 19:02

நான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்...??? சொல்லுங்க...!!!


தமிழ்வேள்
மார் 09, 2025 13:52

சின்ன சின்னவர்.. ன்னு கேள்வி..நாறக்குடும்பம் தொழுநோய் பீடித்து அழுகி சொட்டி கூறவேண்டும்.


orange தமிழன்
மார் 09, 2025 10:37

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு படத்தின் good morning என்ற வார்த்தையே தவறாக சித்தரிக்கப்பட்டது ( நன்றி திரு ரா. பார்த்திபன்)........பிறகு சில மாதங்கள் மக்கள் முருங்கைக்காய் வாங்குவதற்கே நெளிந்தார்கள்.........அந்த வகையில் இந்த 'sir' வார்த்தையும் சேர்ந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.....


S. Balakrishnan
மார் 09, 2025 10:30

"நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்" என்று சொன்ன அந்த அதிகாரி கூடிய விரைவில் தண்ணீர் இல்லாத காட்டுக்கு மாற்றப் படலாம். அந்த அதிகாரிக்கு என் அனுதாபங்கள்.


Venkatesan Srinivasan
மார் 10, 2025 16:41

இது போன்ற தீவிர குற்ற நடவடிக்கைகளில் விசாரணை என்பது சந்தேகிக்கப்படும் குற்றவாளி - குற்றம் சாட்டப்படுபவர் கண்டிப்பாக எந்தவித அரசியலும் அதிகாரமும் தனக்கு துணை வர இயலாது என்ற தூரத்திற்கு அதாவது அந்தந்த மாநிலத்திலிருந்து வேறு மாநிலங்களில் வைத்து விசாரணை செய்யப்பட வேண்டும். இதற்காக மத்திய அரசால் தனி ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பிராந்திய அரசியல் செல்வாக்கு படைத்தவர்கள் அந்தந்த பிராந்தியத்தில் வைத்து விசாரணை செய்யும் வழக்கம் ஒழிய வேண்டும்.


ஆரூர் ரங்
மார் 09, 2025 09:47

சிவப்பு ஆதவனையா ? பரம்பரையே அப்படிதானே?


பேசும் தமிழன்
மார் 09, 2025 09:08

அந்த சார் வேட்டி சட்டை போடாமல்.... பேண்ட் சட்டை போட்டு கொண்டு சுற்றுகிறார் எ‌ன்று சொல்வது..... உண்மையா ????


Radhakrishnan Seetharaman
மார் 09, 2025 14:52

தேயிலை சட்டை )


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 09, 2025 07:27

ஆனாலும் அந்த சார் யாருன்னு சொல்ல மாட்டீங்க. அந்த சார் எந்த சார் க்கு வேலை பார்த்தார் என்று எந்த சார் ரும் சொல்ல மாட்டீங்க. பொறுத்திருங்கள் தாவுத் இப்ராஹிம் சார் இடம் சொல்லி கிரிக்கெட் சூதாட்டம் போல் இதற்கொரு சூதாட்டம் நடத்தி ஒரு ஐம்பதாயிரம் கோடி பந்தயம் நடத்த சொன்னால் தெரிந்து விடும் அந்த சார் எந்த சார் என்று அந்த எந்த சார் எந்த சாருக்கு வேலை பார்த்தார் என்று.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை