உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கருணாநிதி நினைவிடத்தில் துரைமுருகன் மிஸ்சிங்

கருணாநிதி நினைவிடத்தில் துரைமுருகன் மிஸ்சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னையில் நடந்த, அமைச்சர் வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நுால் வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினி பேசுகையில், 'தி.மு.க.,வில் நிறைய பழைய மாணவர்கள் உள்ளனர். 'ரேங்க் வாங்கிய பின்னும் வகுப்பறை விட்டு செல்ல மறுக்கின்றனர்' என அமைச்சர் துரைமுருகன் பெயரை குறிப்பிட்டு பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.ரஜினி மீது அதிருப்தி அடைந்த துரைமுருகன், 'வயதாகி சாகப்போகிற நிலையிலும் நடிப்பதால் தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது' என்று, ரஜினியை விமர்சித்தார்.இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் வற்புறுத்தலால், துரைமுருகன் ரஜினிக்கு போன் செய்து பேசி சமரசமாகினர். இந்நிலையில், முதல்வர் அமெரிக்கா செல்வதையொட்டி, நேற்று மதியம், சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று, மலர் துாவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், துரைமுருகன் பங்கேற்கவில்லை.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

முருகன்
ஆக 28, 2024 20:43

பதவி ஆசை யாரை விட்டது இவர் ஒய்வு பெறும் வயதை கடந்தது பல வருடங்கள் ஆகிறது


தமிழ்வேள்
ஆக 28, 2024 20:31

யாத்திரை கிளம்புவது கோவிலில் இருந்து தான் என்பதே பாரத பாரம்பரியம் வழக்கம்.. ஆனால் திராவிட கும்பலுக்கு யாத்திரை சுடுகாட்டில் இருந்து துவங்கும் போல.. தங்களின் அடுத்த சேரிடம் சுடுகாடு தான் என்று சிம்பாலிக் ஆக திராவிட பாரம்பரியம் சொல்லுகிறது போல...


muthu kumar
ஆக 28, 2024 14:48

மன்னிப்பு கேட்டு இருக்கக்கூடாது. நண்பர்களுக்கு நடந்த கருது pari matrathuku mannipu yetharku


Matt P
ஆக 28, 2024 20:53

எஜமானன் கட்டளையிட்டான் என்பதற்காக


varghees
ஆக 28, 2024 13:07

மந்திரி பதவிக்கு வேற ஆளே கிடைக்கலையா?


Matt P
ஆக 28, 2024 13:00

பதவியை கொடுத்தது முதலு மந்திரி. அவர்களை மந்திரியாக பதவியில் நீடிக்க வைத்து விட்டு அவங்க என்னவோ நாற்காலியை கெட்டியா புடிச்சிக்க மாதிரி பேசியதற்கு பதிலா முதலமைச்சர் வயதானவர்களை பதவியில் நீடிக்க வைக்கலாமா என்று ரஜினி பேச முடியுமா? உதயநிதியை மந்திரியாக்கியது தவறு என்றும் சொல்லி மேடையிலிருந்து இறங்க முடியுமா? வூருக்கு இளைச்சவன் துரை முருகன் என்று பேசி விட்டார். மனிதர்களை மனிதர்கள் மதிப்பது இயல்பாக இருக்க வேண்டும். முகஸ்துதிக்காக என்ன வேண்டுமானாலும் பேசுகிறார்கள்.


varghees
ஆக 28, 2024 13:00

not well for this


Matt P
ஆக 28, 2024 12:49

ஸ்டாலின் கையை புடிச்சு வளர்த்தேன். உதயநிதி என் தோளில் கிடந்து வளர்ந்தான் என்று சொல்லி என்ன பிரயோஜனம். கடைசில அப்பனும் மொவனும் சேர்ந்து ரஜினியை வைச்சி செஞ்சிட்டாங்க. தூக்கத்தை கெடுத்துட்டாங்க. இனி கொஞ்ச நாளைக்கு யாரையும் நக்கல் அடிச்சு சிரிக்க வைக்க முடியாது. வயசான காலத்தில இது தேவையா? சம்பாதிச்ச பணத்தை பார்த்து பார்த்து மகிழிச்சியடைந்து எஞ்சிய காலத்தை தள்ளலாமே.


Raman Kumar
ஆக 28, 2024 11:56

உண்மை எங்கள்மாதிரி எங் ஸ்டார் எப்போது சினிமா அரசியலில் வருவது தாத்தாக்கள் கொஞ்சம் ஓய்வு எடுங்கள் நாட்டுக்காக நீங்கள் உழைத்து கொள்ளையடித்தது போதும்


N Sasikumar Yadhav
ஆக 28, 2024 10:48

ரஜினிகாந்த் துரைமுருகன் இருவருமே சுயநலம் பிடித்த பேராசைக்காரனுங்க


ஆரூர் ரங்
ஆக 28, 2024 10:32

தயிர்வடை பிடிக்காததால் போக முடியவில்லை. படையலை மாத்துங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை