உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  த.வெ.க., கொடி வண்ணத்தில் தயாராகும் பஸ்கள்

 த.வெ.க., கொடி வண்ணத்தில் தயாராகும் பஸ்கள்

சேலம்: சேலம் மண்டலத்தில், த.வெ.க., கட்சிக்கொடி வண்ணத்தில், 25 புதிய டவுன் பஸ்கள் இயக்கப்பட, தயாராக உள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில், அரசு பஸ்கள் பச்சை நிறத்துக்கு மாறின. அதன் பின், தி.மு.க., - அ.தி.மு.க., மாறி மாறி, ஆட்சிக்கு வந்த நிலையில், பஸ்களின் நிறம் மாறவில்லை. கடந்த, 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க., வெற்றி பெற்றநிலையில், பஸ்களின் நிறத்தில் அக்கட்சி கை வைத்துள்ளது. சேலம் பணிமனையில், 492 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், 15 ஆண்டுகளை கடந்த டவுன் பஸ்களுக்கு பதிலாக, புது பஸ்கள் மாற்றப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, 25 பஸ்கள், த.வெ.க., கட்சியின் கொடி வண்ணமான, மஞ்சள், சிவப்பு பூசப்பட்டு, இயக்குவதற்கு தயாராக, ஜான்சன்பேட்டை பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. சேலம் அரசு போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது, 25 புதிய டவுன் பஸ்கள் வந்துள்ளன. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்த பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பஸ்களின் வண்ணம் குறித்து, எதுவும் தெரியாது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !