உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / போலீஸ் வேனில் விநாயகர் சிலை: உணர்வுடன் விளையாடுவதாக பா.ஜ., கண்டிப்பு

போலீஸ் வேனில் விநாயகர் சிலை: உணர்வுடன் விளையாடுவதாக பா.ஜ., கண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில் சில நாட்களுக்கு முன், விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடந்தது. அப்போது கலவரம் வெடித்தது.இதை கண்டித்து பெங்களூரின், டவுன் ஹால் முன் பா.ஜ., உட்பட ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது விநாயகர் சிலையையும் வைத்திருந்தனர்.போராட்டத்தை கட்டுப்படுத்திய போலீசார், ஹிந்து அமைப்பினரை கலைத்தனர். அங்கிருந்த விநாயகர் சிலையை என்ன செய்வது என, தெரியாமல் குழம்பிய அவர்கள், போலீஸ் வாகனத்தின் இருக்கையில் அமர்த்தினர்.கைதியை போன்று விநாயகர் சிலை, போலீஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட படம், தற்போது சமூக வலைதளத்தில் பரவியது. போலீசாரின் செயலை, பா.ஜ., கண்டித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பேசும் தமிழன்
செப் 15, 2024 11:02

கான் கிராஸ் கட்சி.... இந்த நாட்டை பிடித்த கேடு .... இந்த நாட்டில் இருந்து விரட்டப்பட வேண்டும்.


சமீபத்திய செய்தி