உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / உ.பி.,யில் அதிக தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி அள்ளியது எப்படி?

உ.பி.,யில் அதிக தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி அள்ளியது எப்படி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: மற்ற எந்த மாநிலங்களையும் விட, உத்தர பிரதேச அரசியலில், ஜாதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.இதை உணர்ந்து, பல்வேறு தரப்பினருக்கு வாய்ப்பு அளித்ததுடன், மக்களிடையே நேரடியாகச் சென்று பிரசாரம் செய்ததே, சமாஜ்வாதியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.நாட்டிலேயே மிகவும் அதிக அளவாக, 80 எம்.பி.,க்களை அனுப்புகிறது உத்தர பிரதேசம். அதனால், அரசியல் ரீதியில் இந்த மாநிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.இந்த தேர்தலில், மொத்தமுள்ள, 80 தொகுதிகளில், 'இண்டியா' கூட்டணியின் கீழ் இணைந்து போட்டியிட்ட சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ், 45 இடங்களை கைப்பற்றியுள்ளன. இது, பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைப்பதை தடுத்துள்ளது. மேலும், இண்டியா கூட்டணிக்கு மிகப்பெரும் பலத்தையும் அளித்துள்ளது.இந்தத் தேர்தலில் துவக்கத்தில் தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை இருந்தாலும், சமாஜ்வாதி, காங்கிரஸ் இடையே சமரசம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூட்டாக பல பிரசார கூட்டங்களில் பங்கேற்றனர்.தீவிர பிரசாரம் ஒரு பக்கம் இருந்தாலும், சமாஜ்வாதியின் 'சீட்' வினியோகம் அதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதனால்தான், இந்தத் தேர்தலில், அதிக இடங்களில் வென்ற கட்சிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.வழக்கமாக, யாதவ் - முஸ்லிம் என்ற அடிப்படையிலேயே சமாஜ்வாதி தேர்தல்களை சந்தித்து வந்துள்ளது. இந்த தேர்தலில் அதில் மாற்றம் செய்தது.அதன்படி, அகிலேஷ் யாதவ் உட்பட, அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மட்டுமே யாதவர்கள். யாதவர் அல்லாத மற்ற ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த, 27 பேருக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது.உயர் வகுப்பைச் சேர்ந்த, 11 பேருக்கும் சீட் தரப்பட்டது. நான்கு முஸ்லிம்கள் களமிறக்கப்பட்டனர். இதைத் தவிர, தனித் தொகுதிகளில், 15 எஸ்.சி., பிரிவினர் நிறுத்தப்பட்டனர்.இது சமாஜ்வாதிக்கு சரியாக வேலை செய்துள்ளது; தனிப்பட்ட முறையில், 37 இடங்களில் வென்றுள்ளது. கடந்த, 2019 தேர்தலில், பகுஜன் சமாஜ் உடன் கூட்டணி அமைத்து சமாஜ்வாதி போட்டியிட்டது.அப்போது, 37 இடங்களில் போட்டியிட்ட சமாஜ்வாதி, 10 யாதவர்களை களமிறக்கியது. ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது. பகுஜன் சமாஜ், 10 இடங்களில் வென்றது.அந்தத் தேர்தலில் பா.ஜ., 62 இடங்களிலும், கூட்டணி கட்சியான அப்னி தளம், இரண்டு இடங்களிலும் வென்றது.அதற்கு முன், 2014 தேர்தலில், சமாஜ்வாதி, 78 இடங்களில் போட்டியிட்டது. அதில் முலாயம் சிங் குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு பேர் உட்பட, 12 யாதவர்கள் நிறுத்தப்பட்டனர்.யாதவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆதரவே, சமாஜ்வாதிக்கு அடித்தளமாகும். தற்போது, மற்ற ஓ.பி.சி., பிரிவினர் மற்றும் தலித் வேட்பாளர்களை அதிகளவில் நிறுத்தியதே, வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.இதைத் தவிர, வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ததும், சமாஜ்வாதியின் வெற்றிக்கான மற்றொரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மாநிலத்தில் ஆளும் பா.ஜ., பிரமாண்ட பேரணிகள் நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத் என, முக்கிய தலைவர்கள் பிரமாண்ட பேரணிகள், பிரசார கூட்டங்களில் பங்கேற்றனர்.ஒரு சில பிரசார கூட்டங்களை நடத்தினாலும், மக்களை நேரடியாகசந்தித்து ஓட்டு கேட்டதே, சமாஜ்வாதிக்கான ஆதரவு அதிகரித்துள்ளதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.பத்திரிகை யாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த அகிலேஷ் யாதவ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

ஃyts
ஜூன் 05, 2024 19:31

வென்றது வெறும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி தான்


venugopal s
ஜூன் 05, 2024 12:03

மக்கள் விழித்துக் கொண்டால் என்ன நடக்கும் என்பதற்கு உத்திரப் பிரதேச மாநில அரசியல் சரியான எடுத்துக்காட்டு!


venugopal s
ஜூன் 05, 2024 12:01

மக்கள் என்றுமே அரசியல்வாதிகளை விட புத்திசாலிகள், யாரை எங்கு வைக்க வேண்டும் என்பதை நன்றாகவே அறிவார்கள்.


mp
ஜூன் 05, 2024 14:41

தமிழக மக்களை தவிர


venugopal s
ஜூன் 05, 2024 12:00

மக்களை எப்போதும் ஏமாற்றி விடலாம் என்று நினைத்தால் இப்படித்தான் ஆகும். மக்கள் என்றுமே அரசியல்வாதிகளை விட புத்திசாலிகள், யாரை எங்கு வைக்க வேண்டும், யாரை எப்போது எப்படி அடிக்க வேண்டும் என்பதை நன்றாகவே அறிவார்கள்.


Baranitharan
ஜூன் 05, 2024 13:24

கேடுகெட்ட ஜாதி அரசியல்- பொய் வாக்குறுதிகள் - வெளிநாட்டு சக்திகளின் உதவி - இவை எல்லாம் இருந்தும் மோடி வெற்றி பெற்றது சிறப்பான விஷயம் - இந்த கூட்டு நிற்காது உடைந்து ஓடிவிடும்


venugopal s
ஜூன் 05, 2024 12:01

மக்கள் என்றுமே அரசியல்வாதிகளை விட புத்திசாலிகள், யாரை எங்கு வைக்க வேண்டும் என்பதை நன்றாகவே அறிவார்கள்.


A1Suresh
ஜூன் 05, 2024 11:03

மாதந்தோறும் எட்டாயிரத்து ஐன்நூறு என்ற கணக்கில் வருடத்திற்கு ஒரு லட்சம் கிட்டும் என்ற ராகுலின் வாக்குறுதி தான் இந்த தோல்விக்கு காரணம்


Suresh sridharan
ஜூன் 05, 2024 09:40

28 கட்சிகள் கூட்டணி அது இல்லாம சில்லற கட்சிகள் வேற நூறு கூட்டணி எந்த அளவுக்கு பிஜேபி ஜெயிச்சது பெரிய விஷயம் என்ன அத்தனை பேரு மிக வலுவான கூட்டணி பண பலம் ஏனென்றால் கடன் வாங்கியும் செலவு செய்து வெற்றி பெறக் கூடிய தைரியம் அத்தனைக்கும் மேல் பிஜேபி ஜெயிச்சது பெரிய விஷயம்


sankar
ஜூன் 05, 2024 06:56

கேடுகெட்ட ஜாதி அரசியல்- பொய் வாக்குறுதிகள் - வெளிநாட்டு சக்திகளின் உதவி - இவை எல்லாம் இருந்தும் மோடி வெற்றி பெற்றது சிறப்பான விஷயம் - இந்த கூட்டு நிற்காது உடைந்து ஓடிவிடும்


தமிழ்
ஜூன் 05, 2024 16:13

நல்லா சொல்லுங்கள்


sankar
ஜூன் 05, 2024 06:56

கேடுகெட்ட ஜாதி அரசியல்- பொய் வாக்குறுதிகள் - வெளிநாட்டு சக்திகளின் உதவி - இவை எல்லாம் இருந்தும் மோடி வெற்றிபெற்றது சிறப்பான விஷயம் - இந்த கூட்டு நிற்காது உடைந்து ஓடிவிடும்


Saai Sundharamurthy AVK
ஜூன் 05, 2024 03:51

உ.பியில் பாஜக சீட்டுக்களை இழந்ததற்கு காரணம்.....!!! கேள்விப்பட்டதில், காங்கிரஸ் கூட்டணி கொடுத்த பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். அதாவது வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம். பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம். முஸ்லிம்களுக்கு OBC இடஒதுக்கீடு.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை