உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மத்திய அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்க மாட்டேன்: முன்னாள் முதல்வர் குமாரசாமி

மத்திய அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்க மாட்டேன்: முன்னாள் முதல்வர் குமாரசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''மத்திய அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்க மாட்டேன். சுதந்திரமாக செயல்படும்படி பிரதமரிடம் அனைவரும் கூறியுள்ளோம்,'' என, முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.லோக்சபா தேர்தலில், முன்னாள் முதல்வர் குமாரசாமி, ம.ஜ.த., வேட்பாளராக மாண்டியாவில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார்.இரண்டு நாட்களுக்கு முன்பு டில்லி சென்ற அவர், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று, நரேந்திர மோடி, மீண்டும் பிரதமர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்தார். பின், பெங்களூரு திரும்பினார்.இதற்கிடையில், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா அழைப்பின்பேரில், நேற்று குமாரசாமி மீண்டும் டில்லி சென்றார். அங்கு நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றார்.மோடி பிரதமர் ஆவதற்கான, ஜனாதிபதிக்கு வழங்கும் பரிந்துரை கடிதத்தில் கையெழுத்திட்டார்.முன்னதாக, டில்லி விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:மத்திய அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்க மாட்டேன். சுதந்திரமாக செயல்படும்படி பிரதமரிடம் அனைவரும் கூறியுள்ளோம். நாட்டில் நிலையான அரசு இருப்பது முக்கியம்.இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

rsudarsan lic
ஜூன் 08, 2024 21:37

வீடியோ புடிக்கிற டிபார்ட்மென்ட் கேட்டு வாங்கலாம்


முருகன்
ஜூன் 08, 2024 16:26

கொடுத்தல் பிறகு நடப்பது உங்களுக்கு நன்றாக தெரியும்


ஆரூர் ரங்
ஜூன் 08, 2024 09:27

பிரஜவாலுக்கு பதவி கேட்காமலிருந்தால் போதும்.


rao
ஜூன் 08, 2024 09:11

Kumaraswamy has understood the present political and economic situation of the country,hence he has categorically said that no pressure will be exerted


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை