உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சிறுபான்மையினர் ஓட்டுகளை நம்பினால் அரசியலில் காணாமல் போய் விடுவீர்: அ.தி.மு.க.,வுக்கு அமித் ஷா எச்சரிக்கை

சிறுபான்மையினர் ஓட்டுகளை நம்பினால் அரசியலில் காணாமல் போய் விடுவீர்: அ.தி.மு.க.,வுக்கு அமித் ஷா எச்சரிக்கை

'சிறுபான்மையினர் ஓட்டுகளை நம்பினால், அரசியலில் காணாமல் போய் விடுவீர்' என, தன்னை சந்தித்த அ.தி.மு.க.,வினரிடம், உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2019 லோக்சபா, 2021 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்தது. கடந்த 2023 செப்டம்பரில் பா.ஜ., உடனான கூட்டணியை முறித்துக் கொண்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=74k98uns&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கட்டாயம்

'பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால், சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்கவில்லை. அதனால்தான் தோற்றோம' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். வரும் 2026 சட்டசபை தேர்தலில், விஜயின் த.வெ.க., உடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., விரும்புகிறது. விஜய் அதற்கு உடன்படவில்லை. எனவே, பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம், அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்காவிட்டால், கோவை, திருப்பூர், நீலகிரி, சென்னை, கன்னியாகுமரி, துாத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், வெற்றி பெற முடியாது என, அம்மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் கருதுகின்றனர். மாநில நிர்வாகிகளும் இதை உணர்ந்துள்ளனர். ஆனால், ஜெயகுமார், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், ஓ.எஸ். மணியன் போன்றோர், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தால், சிறுபான்மையினர் ஓட்டுகள் முழுமையாக தி.மு.க.,வுக்கு சென்று, அ.தி.மு.க., கூட்டணி வழக்கம்போல் தோற்றுவிடும் எனக் கூறி வருகின்றனர்.பா.ஜ., கூட்டணியை விரும்பும், கொங்கு மண்டல, தென்மாவட்ட நிர்வாகிகளுக்கும் இந்த அச்சம் பெரிய அளவில் உள்ளது. அதனாலேயே, எப்படியாவது பா.ஜ.,வுடன் கூட்டணி வந்தாக வேண்டும் என, கட்சித் தலைமைக்கு அவர்கள் பல வழிகளிலும் எடுத்துச் சொல்லி வருகின்றனர். ஆனால், பழனிசாமி இதை ஏற்க மறுத்து வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26ல், கோவை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் ரகசியமாக சந்தித்துஉள்ளனர்.

ஆபத்து

அப்போது, 'பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க, எங்களுக்கு விருப்பம்தான். ஆனால், சிறுபான்மையினர் ஓட்டுள் கிடைக்காமல் போய்விடும் ஆபத்து உள்ளது' எனக் கூறியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அமித் ஷா, 'சிறுபான்மையினர் ஓட்டுகள் இல்லாமல் தேர்தலில் வெல்ல முடியாது என்பது மாயை. அதை ஹரியானா, திரிபுரா, மஹாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், பா.ஜ., ஏற்கனவே நிரூபித்துள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை, யார் தலைகீழாக நின்றாலும், சிறுபான்மையினர் ஓட்டுகள் தி.மு.க.,வுக்குதான் செல்லும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்திலேயே, சிறுபான்மையினர் ஓட்டுகளில் 70 சதவீதத்திற்கும் மேல், தி.மு.க.,வுக்கு தான் கிடைத்தது. பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தாலும், வைக்காவிட்டாலும், அவர்களின் ஓட்டுகள் அ.தி.மு.க., வுக்கு கிடைக்காது. அந்த ஓட்டுகளை நம்பினால், அரசியலில் காணாமல் போய் விடுவீர்கள்.தி.மு.க.,வின் ஓட்டு வங்கியான, சிறுபான்மையினர் ஓட்டு வரும் என காத்திருக்காமல், தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகளை பெறுவது எப்படி என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் சிறுபான்மையின ஓட்டுகள் 20 சதவீதம் என எடுத்துக் கொண்டால், மீதம் இருக்கும் 80 சதவீத ஓட்டுகளில் 50 சதவீத ஓட்டுகளை பெற அ.தி.மு.க., திட்டமிட வேண்டும்' எனக் கூறியதாக பா.ஜ., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

globetech engineers airport project
மார் 12, 2025 14:39

அடிமை இருக்கிறது


பல்லவி
மார் 11, 2025 14:36

யோக்கியன் வரான் சொம்பை உள்ள வை


kantharvan
மார் 11, 2025 15:21

அமித் சேட்டு கடையில அதிமுகவை அடகு வைக்க நினைக்கும் புல்லுருவிகளை நீக்க வேண்டும்


ராஜாராம்,நத்தம்
மார் 11, 2025 21:35

திமுகவை இப்படி மறைமுகமாக அசிங்கப் படுத்தாதே இப்படி இழிவு படுத்துவது கண்டனத்துக்கு உரியது.


venugopal s
மார் 11, 2025 12:38

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்பது போல் உள்ளது அதிமுகவுக்கு அமித்ஷா அவர்கள் வழங்கும் அறிவுரை!


vivek
மார் 11, 2025 13:45

ஈயமும் பித்தளையும் இரும்பை விட விலை அதிகம்.....இரும்பு கை கோமாளி


orange தமிழன்
மார் 11, 2025 11:55

சிறுபான்மையின் மக்கள் பிஜேபிக்கு வாக்கு செலுத்த மாட்டார்கள் என்பது ஒரு மாயை.....சிறுபான்மயர் அதிகம் வசிக்கும் இடங்களில் பிஜேபி வென்று இருக்கிறது.....( உதாரணம்: UP மற்றும் மகாராஷ்டிரா)....இங்கேயும் அது விரைவில் நடக்கும்.....


Rangarajan Cv
மார் 11, 2025 17:14

Very true. This can happen only when on ground more inclusive growth is happening


தேவராஜன்
மார் 11, 2025 10:25

வரும் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் சேர்த்து போட்டியிடாவிட்டால் இது தான் அதிமுகவின் கடைசித் தேர்தலாக இருக்கும். எடப்பாடியார் எதிர் காலத்தைப் பற்றி மிகவும் சிந்தித்து செயல் பட வேண்டிய தருணம் இது.


பேசும் தமிழன்
மார் 11, 2025 08:11

உண்மை தான்..... இவர்கள் சிறுபான்மை ஓட்டு என்று கூறி.... குண்டு வெடிப்பு நடந்தாலும் அதை கண்டிக்காமல் இருப்பது..... எப்போதும் கிடைக்கும் இந்து ஓட்டுக்களும் கிடைக்காமல் போகும்.... அதனை கண்கூடாக பார்த்து கொண்டு இருக்கிறோம்.... அந்த ஓட்டுக்கள் எல்லாம் பிஜெபி கட்சிக்கு மாறி வருகின்றன நோட்டா கட்சி என்று கூறி கொண்டு இருந்த பிஜெபி கட்சி பாராளுமன்ற தேர்தலில் இத்தனை சதவீதம் ஓட்டுக்கள் வாங்க முடியுமா ???..... கூட்டணி சேராமல் இந்துக்கள் ஓட்டுக்களை பிரிக்கும் வேலையை திமுக செய்யும்,... அதை மீறி இந்துக்கள் ஓட்டுக்களை ஒன்றிணைக்கும் வேலையை பழனிசாமி மற்றும் அண்ணாமலை செய்ய வேண்டும்.


Oviya Vijay
மார் 11, 2025 07:22

இந்தியாவில் சிறுபான்மையினர் என்றால் அது சங்கிகள் மட்டுமே... நாட்டில் அமைதி ஏற்படாமல் இருக்கச் செய்து எந்நாளும் மத மோதல்களை தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கும் மொத்த மக்கள் தொகையின் சிறு பகுதியினர் அவர்கள்... எந்த மதத்தவராயினும் மேன்மை மனம் படைத்தவர்கள் அனைவரும் பெரும்பான்மை சமூகத்தில் தான் வருவர்... அவர்களில் சிறுபான்மையினர் இல்லை...


V வைகுண்டேஸ்வரன்,Chennai
மார் 11, 2025 08:10

கோட்டா வில் வயிறு வளர்க்கும் ooviya vijay, அடுத்தவர் வரிபணத்தில் வயிறு வளர்க்கும் உனக்கே இவ்ளோ ஆணவம். அது வரும் காலத்தில் ஒடுக்கப்படும்.


vivek
மார் 11, 2025 09:14

மறுபடியும் ஒரு கொத்தடிமையின் கேனதனமான கருத்து


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
மார் 11, 2025 09:34

மதம் மாறிட்டாலே மூளையில் இந்து எதிர்ப்பு தானாக புகுந்து விடுமோ இனிமேலும் நீ இந்துக்களை அவமானப்படுத்தும் வகையில் அடிக்கடி சங்கி என்று கூறினால் உன்னோட ... வண்டவாளங்களை வெளியிட நேரிடும் ஒழுங்கு மரியாதையோடு கருத்தை பதிவிடு.


saravan
மார் 11, 2025 10:21

மதம் மாறிட்டாலே இந்து எதிர்ப்பு மட்டுமல்ல...இந்திய எதிர்ப்பும் மனதில் வந்து விடுகிறது போல...இந்த போக்கை கட்டுப்படுத்த எளிய வழி...இந்து சமய அறநிலைய துறை போல சிறுபான்மை சமய அறநிலைய துறை உருவாக்கி, இவர்களது கோவில் வருமானங்கள் அரசே நிர்வகிக்க வேண்டும்...அப்போது இவர்களது கொட்டம் அடங்கி விடும்...காசு கொட்டுவதால் தான் அவர்கள் ஓவியா போல பிரிவினைவாதிகளாக மாறுகிறார்கள்...


ஆரூர் ரங்
மார் 11, 2025 10:36

திமுக கூட்டாளி 1 சிறையிலிருக்கும் பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு சட்டவிரோதமாக அன்னிய நாடுகளில் நிதி திரட்டியதற்காக சிறைத்தண்டனை பெற்ற ஜவாஹிருல்லா 2 பயங்கரவாதிகள் குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து உதவிய லீக். இப்போ யார் மதமோதல்களை உருவாக்குகிறார்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
மார் 11, 2025 21:38

அப்பத்துக்கு மதம் மாறிய நீ எப்பவுமே இது போல் வெறுப்பு கருத்தை மட்டுமே பதிவிடுகிறாய் உமக்கு பாவமன்னிப்பே கிடையாது.


கிஜன்
மார் 11, 2025 06:59

தவறான தகவல் .... எம்.ஜியார் ...ஜெ ...காலத்தில் கலைஞர் ...தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து பார்த்தார் .... சிறுபான்மையினர் வாக்கு திமுகவிற்கு விழவே இல்லை .... சிறுபான்மையினர் அதிகம் உள்ள தொகுதிகளில் ஒரு இந்துவையும் .... பொது தொகுதிகளில் ...ஒரு தலித் சமுதாய வேட்பாளரையும் .... பெரும்பான்மையினர் அதிகம் உள்ள தொகுதிகளில் ஒரு சிறுபான்மையினரையும் .... நிறுத்தி வெற்றிபெற செய்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள் ... நியாயமாக நடந்தால் ...பெரும்பான்மை என்ன ...சிறுபான்மை என்ன ...


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 11, 2025 09:50

நியாயமாக நடந்ததால் தான் சிறுபான்மையினர் திமுகவிற்கு வாக்களித்தனரா? வெடிகுண்டு வெடித்தாலும் குக்கர் வெடித்தது என்றும், 52 பேர் குண்டு வைத்து கொன்று சிறை தண்டனை பெற்ற ஒருவர் இறந்ததற்கு தியாகியை போல் அடக்கம் செய்ய ஆயிரம் போலிஸ் காவலுக்கு அனுப்பியதாலும், காலம்காலமாக இந்துக்கள் வழிபட்டு வரும் திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று கூறும் போதும் அங்கு அசைவ உணவை எடுத்து செல்லும் போதும் அமைதியாக ஒருதலைப்பட்சமாக இருந்ததாலும்....வங்க தேசத்திலிருந்து வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாலும், அமைதி தமிழகத்தில் தீவிரவாதிகள் புகலிடமாக மாற்றியதாலும், தவறு செய்யும் குற்றவாளிகள் இந்துவாக இருந்தால் அவர்களது பேரை போடுவதும் அதுவே இஸ்லாமியராக இருந்தால் மர்ம மனிதர்கள் என்று போட்டு அவர்களுக்கு பாதுகாப்பாகவும், கோவில் வருமானத்தில் இஸ்லாமியர்களுக்கு அரிசியும், ஹஜ் பயணத்திற்கு பணம் கொடுப்பதாகவும் தான் ஓட்டு போடுகிறார்கள்....!!!


raja
மார் 11, 2025 06:53

இந்துக்கள் மட்டும் ஜாதிகளை கடந்து ஒன்றிணைந்தால் போதும் இந்த திருட்டு திராவிட ஒத்த டோலக்குடன் திருட்டு இரயில் ஏறி வந்த கோவால் புற கொள்ளை எச்சகலைகளை அடித்து விரட்டி விடலாம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை