உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நிதீஷ் குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக ஆசைகாட்டிய இண்டியா கூட்டணி

நிதீஷ் குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக ஆசைகாட்டிய இண்டியா கூட்டணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின், நிதீஷ் குமாருக்கு பிரதமர் பதவியைத் தருவதாக, இண்டியா கூட்டணி ஆசை காட்டியது. ஆனால், அதை அவர் நிராகரித்தார்,'' என, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்தார்.பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. லோக்சபா தேர்தலில், 12 தொகுதிகளில் அக்கட்சி வென்றது. தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, நிதீஷ் குமார் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவின், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி பேசியதாக தகவல்கள் வெளியாயின.இது குறித்து ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி. தியாகி கூறியுள்ளதாவது:தேர்தல் முடிவுகள் வெளியானபோது, பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கவிடாமல் தடுப்பதற்காக, நிதீஷ் குமாருடன், இண்டியா கூட்டணி கட்சியினர் பேசினர். அவருக்கு பிரதமர் பதவியை தருவதாக ஆசை காட்டினர்.இண்டியா கூட்டணி உருவாவதற்கு முக்கிய பங்காற்றிய அவருக்கு, ஒருங்கிணைப்பாளர் பதவியைத் தருவதற்கு தயங்கினர். தற்போது பிரதமர் பதவியையே தருவதாக ஆசை காட்டினர். ஆனால், அதை அவர் நிராகரித்தார்.பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, இந்தப் பேச்சுகளுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S.Govindarajan.
ஜூன் 09, 2024 10:58

இந்த முறை வேறு வித்தியாசமான மோடியை எதிர்க் கட்சியினர் பார்க்கப் போகிறார்கள்


T.Gajendran
ஜூன் 09, 2024 12:43

ஆமாங்க, அண்ணே? இந்த முறை கண்டிப்பா


T.Gajendran
ஜூன் 09, 2024 12:51

ஆமாங்க, அண்ணே இந்த முறை, நமது, மாண்புமிகு, பிரதமர், அவர்கள், வித்தியாசமா, தான் இருப்பார், ஏன் என்றால், எந்த முக்கியமான, முடிவு எடுக்கனும், என்றாலும், மாண்புமிகு நிதிஷ் குமார் மற்றும் மாண்புமிகு சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டுதான் முடிவு எடுக்கனும், முன்பு போலே, அவரால், சொந்தமான முடிவு எடுக்க முடியாது, இந்த வித்தியாசம் தான், இனி அவரிடம் பார்க்க முடியும், அண்ணே?


cbonf
ஜூன் 09, 2024 09:12

மோதி -3 ல் - முதல் காரியமாக பல ஊழல் அரசியல் வாதிகள் சிறை செல்வார்கள். அதனால் தான் மம்தா, பப்பு போன்ற ஊழல்வாதிகள் பயந்து சாகிறார்கள்


பேசும் தமிழன்
ஜூன் 09, 2024 09:10

இத்தாலி பப்பு..... புற வாசல் வழியாக ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கனவு கண்டார்... அதில் நிதிஷ் குமார் மற்றும் சந்திர பாபு நாயுடு மண்ணை அள்ளி போட்டு விட்டனர்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ