உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அகல்யாபாய் பிறந்த நாள் கொண்டாடும் ம.பி., மக்கள்

அகல்யாபாய் பிறந்த நாள் கொண்டாடும் ம.பி., மக்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்துார் ராணி அகல்யாபாய் ஹோல்கரின் 300வது பிறந்த நாள் இன்று. அதை மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச மக்கள் கொண்டாடுகின்றனர். மஹாராஷ்டிர மாநிலம், அகமத் நகரில், 1725 மே 31ல் பிறந்தவர் அகல்யாபாய். தந்தை மங்கோஜி ஷிண்டே. தாய் சுசீலா. அவரின் அறிவாற்றல், சிவ பக்தி, அன்பு, மக்கள் மீது காட்டும் அக்கறை ஆகியவற்றை அறிந்த இந்துார் மன்னர் மல்ஹோரா ராவ், தன் மகன் காண்டே ராவுக்கு அகல்யாபாயை திருமணம் செய்து வைத்தார்.கணவர் அகால மரணமடைந்ததால், இந்துார் மகாராணியாக, 1767ல் பொறுப்பேற்றார். அப்போது, மொகலாயர்களின் ஆட்சிக் காலம் என்பதால், அவர்களை எதிர்த்து போராடி, ஆட்சியை தக்கவைத்தார். பல்வேறு சமூக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். குழந்தை திருமணத்தை தடுத்தார். அவரது ஆட்சியில் அன்னிய ஆட்சியாளர்களால் இடிக்கப்பட்ட கோவில்களை சீரமைக்கப் பட்டன. சிவ பக்தையான அவர் தன் ஆட்சியையே சிவபெருமானுக்கு அர்ப்பணித்தார்.அன்னிய ஆட்சியாளர்களால் இடிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவிலை சீரமைத்தார் ராணி அகல்யாபாய். அதையடுத்தே, தற்போது புதுப்பித்து கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், அவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. காசி கோவில் வளாகம் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ராணி அகல்யாபாயின் வீரம், தியாகம், பக்தியை நினைவு கூர்ந்தார்-நமது நிருபர்-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

CHELLAKRISHNAN S
மே 31, 2024 12:37

i was in indore n proud to say i was an mba student of devi ahilyabai university. pranam to her. great personality


Sampath Kumar
மே 31, 2024 08:51

இந்த செய்தி உள்ளநோக்கம் புரிகின்றது ஏன் நம்ம தமிழ் நாட்டில் இது போல நிறைய பேரு இருகின்டர்கள் அவர்களை பற்றி செய்தி போடு வீர்களா மாட்டர்கள் அம்புட்டு வஞ்சம்


Shekar
மே 31, 2024 09:40

இதை விடியலாரிடம்தான் கேட்கவேண்டும், ஈரவெங்காயம், கட்டுமரம் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்ததாக கட்டுக்கதை விடுவதை முதலில் நிறுத்த சொல் சுதந்திர போராட்டவீரர்கள், நாட்டுக்காக தியாகம் செய்த வரலாற்று தலைவர்கள் பற்றிய படங்களை பள்ளிபாடங்களில் வைக்கச்சொல்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ