உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மூடுவிழா நடத்துவார் இ.பி.எஸ்.,: மீண்டும் சொல்கிறார் தினகரன்

மூடுவிழா நடத்துவார் இ.பி.எஸ்.,: மீண்டும் சொல்கிறார் தினகரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தஞ்சாவூர் : அ.தி.மு.க., உரிமை மீட்புக் குழுவை சேர்ந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான வைத்திலிங்கத்தை, சசிகலா, தினகரன், திவாகரன் ஆகியோர் தனித்தனியே சந்தித்தனர்.உடல்நிலை சரியில்லாமல், மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சில நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zlca9uoq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள வைத்திலிங்கம் வீட்டுக்கு அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், ஜெயலலிதாவின் தோழி சசிகலா,அவருடைய சகோதரர் திவாகரன் ஆகியோர் தனித்தனியே சந்தித்து, உடல்நலம் விசாரித்ததோடு, தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர்.

சந்திப்புக்குப் பின், தினகரன் அளித்த பேட்டி:

உடல்நலம் பாதிக்கப்பட்ட வைத்திலிங்கத்தை சந்தித்து விசாரித்தேன். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பேசினோம். பழனிசாமிடம் இரட்டை இலை இருந்தாலும், கட்சி பலவீனமாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், வரும் தேர்தலுக்குப் பின், பழனிசாமி கட்சிக்கு மூடுவிழா நடத்தி விடுவார். அதனால் தான், தேர்தலுக்கு முன்பாகவே ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வலியுறுத்துகிறோம்.

சசிகலா அளித்த பேட்டி:

நடத்தவிடாமல் செய்யவே, தி.மு.க., - எம்.பி.,க்கள் லோக்சபாவுக்கு செல்கின்றனர். இதற்கெல்லாம் வரும் 2026 சட்டசபை தேர்தலிலேயே மக்கள் பதிலடி கொடுப்பர். பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க.,வால் சரியான ஆட்சியை கொடுக்க முடியவில்லை; திணறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
மார் 11, 2025 12:40

அதிமுகவின் அழிவை ஆரம்பித்து வைத்ததே இவர்கள் இருவரும் தான், ஈபிஎஸ் முடித்து வைக்கப் போகிறார்!


தேவராஜன்
மார் 11, 2025 10:53

சசிகலா, தினகரனைக் கட்சியில் சேர்த்தால் அதுவே அதிமுகவின் அழிவின் ஆரம்பம். அத்திருட்டுக் கும்பலின் வாசமே படாமல் எடப்பாடி பழனிச்சாமி பார்த்துக் கொள்ள வேண்டும்.


bharathi
மார் 11, 2025 10:50

you both stay away as you have not done anything good. leaders like sengottaiyan must be awarded


கிஜன்
மார் 11, 2025 06:49

முதலில் நீங்கள் தேவர் இன தலைவர்களை மட்டும் பார்க்காமல் ..... சிவி சண்முகம் .... செங்கோட்டையன் ... போன்றவர்களையும் சென்று சந்தியுங்கள் ....


A Viswanathan
மார் 11, 2025 08:26

நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் உங்கள் இருவரையும் அதிமுக சேர்கமாட்டார்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை