உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஓய்வூதிய கோரிக்கைக்காக வலுப்பெறும் போராட்டங்கள்; சங்கங்களை சமாளிப்பது அரசுக்கு சவால்

ஓய்வூதிய கோரிக்கைக்காக வலுப்பெறும் போராட்டங்கள்; சங்கங்களை சமாளிப்பது அரசுக்கு சவால்

மதுரை; ஓய்வூதிய கோரிக்கைகளுக்காக தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளும் தன்னெழுச்சியாக பங்கேற்றன. இப்போராட்டம் 2026 தேர்தலை எதிர்நோக்கி இன்னும் தீவிரமாக வலுப்பெற வாய்ப்புள்ளது என, ஊழியர்கள் தெரிவித்தனர்.தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சரண் விடுப்பு, அகவிலைப்படி நிலுவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இவையெல்லாம் அனைத்து துறை ஊழியர்களுக்கும் உரியவை. இதற்காக 2003 முதல் ஜாக்டோ ஜியோ என்ற அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒரே அமைப்பாக போராடி வருகிறது.இதுபோல பல அரசு ஊழியர்கள் அமைப்பு சேர்ந்து சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் என்ற பெயரிலும் போராடி வருகின்றன. மேலும் துறைரீதியான பல நுாறு சங்கங்களும் தங்கள் கோரிக்கைக்காக போராடும்போது, ஓய்வூதிய கோரிக்கையையும் வலியுறுத்துகின்றன. இப்படி பல ஆண்டுகளாக போராடியும் எந்தப் பலனும் இல்லை.சங்கங்களின் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் அ.தி.மு.க.,- தி.மு.க., ஆட்சிகளின்போது இதற்காக அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிடுகின்றன. அறிவிப்போடு சரி. அக்குழு செயல்பட்டதா இல்லையா என்று பார்ப்பதில்லை. இதனால் ஓய்வூதிய கோரிக்கைக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் ஜாக்டோஜியோ, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், வருவாய்த்துறை கூட்டமைப்பு என சங்கங்கள் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தன. ஐகோர்ட் அனுமதி மறுத்ததால், ஆர்ப்பாட்டத்துடன் கலைந்தனர்.சாதாரணமாக துவங்கிய ஆர்ப்பாட்டத்தில் சங்கங்கள் அனைத்தும் தன்னெழுச்சியாக பங்கேற்றன. இதில் மாநில அளவில் ஆசிரியர்கள் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், அரசு ஊழியர்கள் 21ஆயிரத்துக்கும் மேலாகவும் பங்கேற்றனர். மதுரை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் அதிகளவாக 1104 பேர் பங்கேற்றனர். இதனால் மதுரை கலெக்டர் அலுவலக வளாகமே போராட்ட களமாக காட்சியளித்தது. தேர்தல் நெருங்குவதால் வருங்காலங்களில் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினால் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.ஓய்வூதியம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைப்பதாக அறிவித்ததை எந்த சங்கமும் நம்பவில்லை. இதனால் அவர்களை தேர்தல் வரை சமாளிப்பது அரசுக்கு சவாலாகவே இருக்கும். நேற்றைய போராட்டம் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களுக்கு அந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது.வருவாய்த்துறை பதவி உயர்வு சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெயகணேஷ் கூறியதாவது: மதுரையில் வருவாய்த்துறை கூட்டமைப்பு உருவாகி, அனைத்து சங்கங்களும் ஒரே நாளில் போராடினால்தான் பலன் கிடைக்கும் என்ற கருத்தை முன்வைத்தது. ஓய்வூதியம் பொதுவான கோரிக்கை என்பதால் பொது சங்கங்களில் இல்லாத அமைப்பினரும் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்து கொண்டதால் அலுவலகங்கள் காலியாக கிடந்தன. இந்த எழுச்சியால் கோரிக்கையை வெல்லலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் அடுத்து வரும் தொடர் வேலை நிறுத்தங்களிலும் அனைத்து சங்கங்களும் இணைந்து போராட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

manivannan
பிப் 27, 2025 20:52

இதற்கு முன்பு ஆண்ட கட்சிகள் தற்போது ஆளுங்கட்சி இவர்களிடம் பல லட்சம் கோடி ஊழல் லஞ்சமாக சம்பாதித்த சொத்துகள் இருக்கிறது இதை வைத்து தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு வரியில்லா பட்ஜெட் போட முடியும் இப்பொழுது இவர்களும் அடுத்த தேர்தலுக்காக பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்துதான் கொண்டிருக்கிறார்கள் இலவசம் தேர்தல் அன்று வாக்குக்காக பணம் பிரியாணி சரக்கு இவைகளை வாங்கி கொடுத்து ஆட்சி கட்டிலில் அமர்ந்து விட்டு பிறகு எகத்தாளமாக நடந்து கொள்வது இவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது


Mahendran R
பிப் 27, 2025 20:45

ஏதோ ஏதோக்கும் மக்கள் வரி பணத்தையும் கடன்வாங்கியும் வீண் செலவுகள் செய்யும் போது, மக்களுக்காக உழைத்தவங்களுக்கு பழைய பென்ஷன் தந்தால் என்ன?


Mahendran R
பிப் 27, 2025 20:35

அரசு இயந்திரம் என்பது அரசு ஊழியர்கள் நன்றாக இருந்தால்தான் அரசு நன்றாக இயங்க முடியும். உடலில் மூளை சிறியதாக இருந்தாலும், அதன் வேலை மிக பெரியது, இதை உணர்ந்து வாயை மூடிக்குனு போங்க. அரசாங்கத்தில் இருக்கிற எம. எல். ஏ, எம். பி களெல்லாம் பென்ஷன் வாங்கலையா? வாக்குறுதியும் கொடுத்தீங்களே, பதவிக்கு வந்ததும், இப்படியா நாலு வருடமா இழுத்தடிப்பது?


C G MAGESH
பிப் 27, 2025 18:46

அரசு ஊழியர்களுக்கு பேராசை. சுடலைக்கு தர்மசங்கடம். அரசு ஊழியர்களை கழக ஊழியர்களாக ஆக்கினா இப்படி தான்.


K B Janarthanan
பிப் 27, 2025 15:13

தனியார் நிறுவனத்தில் பணி புரியம் ஊழியர்கள் உரிமையாளருக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊழியரை நிரந்தர பணி நீக்கம் செய்து வேறொரு நபரை நியமனம் செய்வர். அதே போன்று அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊழியரை நிரந்தர பணி நீக்கம் செய்து வேறொரு நபரை நியமனம் செய்ய வேண்டும். விதி முறை ஏதும் இல்லை எனில் , இதற்கான சட்டம் இயற்ற வேண்டும். ஆட்சிக்கு எந்த பாதகமும் இல்லை. தற்போதய மகளிருக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் மற்றும் மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் நடை முறையில் உள்ளது. மேலும் இத்திட்டம் மகளிரடையே மிகுந்த செல்வாக்குபெற்றுள்ளதால் ஆட்சிக்கு எந்த பாதகமும் இல்லை.


Venkatachalapathy
பிப் 27, 2025 19:46

கே பி ஜனார்த்தனன் அவர்களே நீங்களோ, உங்கள் குழந்தைகளோ அரசு பணிக்கு வந்தால் அவர்களுக்கும் இதே நிலை தான் அமைச்சர்கள் எத்தனை முறை பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு தனி ஓய்வூதியம் வழங்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா ?அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை நிறுத்த சொல்லுங்களேன் பார்ப்போம்.


naranam
பிப் 27, 2025 14:30

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பொய்களை அள்ளி வீசுவது தீயமுக வின் வழக்கம். ஆனால் ஒரு குடும்பத்துக்கு மட்டும் செல்வத்துக்கு குறைவே இல்லை. அது எப்படி?


m.arunachalam
பிப் 27, 2025 10:18

எந்த வருமானத்தில் இருந்து கொடுக்க முடியும்? எல்லா கட்சிகளும் அரசு ஊழியர்களுக்கு நிறைய செய்து விட்டார்கள். உணர்ந்தால் நல்லது .


manivannan
பிப் 27, 2025 20:59

உனக்கும் உன் எதிர்கால சந்ததியினருக்கும் வேலை கிடைக்காத வழியில் இன்று அரசனுடைய திட்டங்கள் தீட்டப்பட்டு அழிக்கப்படுகிறது அனைத்து பணிகளுக்கும் அவுட்டோர் உரையில் ஆள் எடுப்பதும் மற்றும் இலவசங்களை அள்ளி வீசுவதுமாக வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் தனிமனிதனுக்கான வேலை வாய்ப்பு திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லை எதிர்காலத்தில் காலத்தில் அரசு பணி என்பதே இருக்காது. ஆகையால் அரசாங்கத்தையும் அவுட்சோர்ஸ் முறையில் நாம் நடத்திக் கொள்ளலாம் அதாவது அனில் அம்பானி முகேஷ் அம்பானி மிட்டல் இவர்களிடம் நாம் ஒப்படைத்துவிட்டு அடிமைகளாக இருக்கலாம் கொள்ளை கும்பலிடம் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை