உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதுபான ஊழலில் கிடைத்த ரூ.1000 கோடி தேர்தலுக்காக பதுக்கல்: அண்ணாமலை பகீர்

மதுபான ஊழலில் கிடைத்த ரூ.1000 கோடி தேர்தலுக்காக பதுக்கல்: அண்ணாமலை பகீர்

துாத்துக்குடி:''மதுபான ஊழலில் தி.மு.க.வுக்கு மட்டும் சுமார் 1000 கோடி ரூபாய் கருப்பு பணமாக கிடைத்துள்ளது, தேர்தலுக்காக அதை பதுக்கி வைத்துள்ளனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9dbww9js&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அவர் அளித்த பேட்டி:

டில்லி, சட்டீஸ்கர் மதுபான ஊழலை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் மதுபான ஊழல் நடந்துள்ளது. அது அமலாக்கத்துறை சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடவில்லை. சுமார் 30000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுபான ஊழல் மூலம் தி.மு.க.,வுக்கு மட்டும் சுமார் 1000 கோடி ரூபாய், கருப்பு பணமாக மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவறான மதுபான கொள்முதல் கொள்கையால் தி.மு.க.வுக்கு கிடைத்த பணத்தின் மூலம், 2024 பார்லிமெண்ட் தேர்தலை சந்தித்துள்ளனர். அடுத்து, 2026 சட்டசபை தேர்தலையும் சந்திக்க, நிறைய பணம் பதுக்கி உள்ளனர். டாஸ்மாக் நிறுவனமும், மதுபான ஆலை நிர்வாகங்களும் இணைந்து, தமிழக மதுபான கொள்கையை முடிவு செய்கின்றன. அமலாக்கத் துறை அறிக்கை வந்த பின், 2026 தேர்தல் வரை மக்கள் இதை பற்றி பேச வேண்டும். ஒரு தலைபட்சமாக மத்திய அரசு அமலாக்கத்துறை வாயிலாக சோதனை நடத்துகிறது என சொல்கின்றனர். பா.ஜ. நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது கிடையாது. கடந்த காலங்களில் காங். ஆட்சியில் இடம்பெற்றிருந்த தி.மு.க.வை, ரெய்டு நடத்தி, கூட்டணி சேர்ந்தது காங்., 356 பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைத்தது காங்., அவர்களோடுதான் தற்போது கூட்டணியில் உள்ளனர்.கனிமொழி எம்.பி., யின் மகன் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர். இங்குள்ள ஏழை குழந்தைகள் மூன்று மொழிகள் படிக்கக்கூடாது என, கனிமொழி ஒரு போதும் கூறக்கூடாது. அதற்கான அருகதை அவருக்கு கிடையாது. களிமண் கரத்தை வைத்துக் கொண்டு முதல்வர் இரும்புக் கரம் என பொய் சொல்கிறார்.திராவிட சித்தாத்தம் பேசுவதற்கே, நாம் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். பிறகு மாணவர்களின் திறன் வளரும்?.நீட் தேர்வு விவகாரம் எப்படி தோல்வியில் முடிந்ததோ, அதேபோலதான், தமிழக அரசின் மும்மொழி எதிர்ப்பு கொள்கையும் தோல்வியில் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

'அண்ணே ஸ்ட்ராங்கா பேசுங்க!'

அ.தி.மு.க., தென் சென்னை மாவட்ட நிர்வாகி ஒருவரது இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது. அந்நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து காரில் கிளம்பிய சீமானை பார்ததும், அவருடைய காரை நோக்கி ஓடி வந்தார். காரில் இருந்த சீமானிடம், ''அண்ணே... தைரியமா இருங்க. எல்லாமே நல்லபடியா நடக்கும். எல்லாத்தையும் ஸ்ட்ராங்கா பேசுங்க...'' என கூறி கைகுலுக்கிச் சென்றார் அண்ணாமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Mediagoons
மார் 13, 2025 21:18

உலகமெல்லாம் இருந்து மோடி மோடியின் ஆட்கள் இறக்குமதி செய்த கோடிக்கணக்கான கோடிகள் எங்கு ஒளிந்துகிடக்கின்றன என்று அண்ணாமலை கன்டுபிடிக்கலாமே


மலை நேசன்
மார் 13, 2025 20:29

மதுபான‌ ஊழல் கேஜ்ரிவால் முடிந்தது. அதே மதுபான ஊழல். முடிவும் அதே மாதிரியா? அண்ணாமலை ஆட்டம் சூப்பர்.


venugopal s
மார் 13, 2025 20:12

ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டியது தானே? இல்லாவிட்டால் இது வெறும் அரசியல் சித்து விளையாட்டு என்று எல்லோருக்கும் தெரியும்!


kr
மார் 13, 2025 19:08

BJP is ruling party at the centre. Annamalai should not stop at releasing such corruption files and charges. He should impress upon courts and union government to take definitive actions on these wrong doings


pmsamy
மார் 13, 2025 15:01

அண்ணாமலை நீ எப்போ மதுபான ஊழல் பண்ணுன பலே கில்லாடி டா நீ


பேசும் தமிழன்
மார் 13, 2025 17:03

எழுந்திரு... எழுந்திரு.... தண்ணிய குடி.... டாஸ்மாக் வீரன் இன்னும் தெளியவில்லை போல் தெரிகிறது.


guna
மார் 13, 2025 17:10

pmsamy.... நீ லூ சா இல்லை.லூ. சா மாறி நடிகிரயா


Azar Mufeen
மார் 13, 2025 13:16

சரி விடுப்பா ரெண்டு களவாணி கட்சிகளும் கூட்டணி வச்சுத்தான் தேர்தல்ல நிக்க போறீங்க ரெண்டு கட்சிகளோட வேட்பாளர்களுக்கும் சரியா பிரிச்சுகொடுப்பாங்க அதுவரைக்கும் ரெண்டு களவாணி கட்சிகளும் மாறி மாறி திட்டுங்க


தேவராஜன்
மார் 13, 2025 10:58

இவ்வளவு தானா? பணி நிமித்தமாக செல்வோரைத் தவிர்த்து, அடிக்கடி வெளிநாடு சென்று வருவோரைக் கண்காணிக்க வேண்டும்.


saravan
மார் 13, 2025 10:11

உண்மைதான் ப்ரோ...இவன் திராவிட அடிமைதான்...பெயரை மட்டும் அப்பப்போ மாத்திக்குவான்...இப்போ சிட்னியில் இருந்து திராவிடத்தை ...


Senthoora
மார் 13, 2025 07:25

2024 தேர்தலில் தலைமையகம் 100 கோடி இவர் பதுக்கிய விடய fail அமித்ஷாவிடம் இருக்கு.


Sakthi,sivagangai
மார் 13, 2025 09:29

அறிவாலய அடிமையே அதெப்பிட்றா அண்ணாமலை செய்தி வந்தால் மட்டும் கரெக்டா திமுகவிற்கு முட்டுக் கொடுக்க ஓடி வர்ற


பேசும் தமிழன்
மார் 13, 2025 17:06

உங்களுக்கு 200 மட்டும் தான்... வேண்டுமானால் குவாட்டருக்கு பதில் முழு பாட்டில் கொடுப்பது பற்றி யோசிப்பார்கள் !!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை