உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அமெரிக்காவில் சிவகுமார் விளையாடிய சதுரங்க வேட்டை

அமெரிக்காவில் சிவகுமார் விளையாடிய சதுரங்க வேட்டை

கர்நாடகாவில் முதல்வராக இருக்கும் சித்தராமையாவுக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ, அதே அளவுக்கு துணை முதல்வர் சிவகுமாருக்கும் அதிகாரம் இருக்கிறது என்றே சொல்லலாம். சிலரை தவிர, பெரும்பாலான தலைவர்கள், சிவகுமாரின் பேச்சுக்கு கட்டுப்படுகின்றனர். அவரை கண்டால் அச்சப்படுகின்றனர். இவர் ஒரு முடிவை எடுத்தால், யாரும் மறுப்பு தெரிவிப்பதில்லை. அந்த அளவுக்கு அதிகாரம் படைத்தவராக இருக்கிறார். இதை பயன்படுத்தி, முதல்வர் பதவி பெறுவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.

சந்தேகம்

ஆனால், 'மூடா' முறைகேடு பிரச்னை எழுந்த போது, சித்தராமையா முதல்வராக தொடர்வார் என்று அவரே அறிவித்தது, முதல்வர் வட்டாரத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மூடா முறைகேடு வழக்கு, உயர் நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்து வந்த வேளையில், இம்மாதம் 8ம் தேதி, திடீரென குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார் சிவகுமார்.இவர் பங்கேற்ற நிகழ்ச்சியில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் பங்கேற்றார். காங்., கட்சியின் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவும் வந்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட சிவகுமார், முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தியாக தகவல் வெளியாகி உள்ளது.கர்நாடகாவில் நிலவும் அரசியல் சூழ்நிலையை நீண்ட நேரம் விளக்கி, சித்தராமையாவுக்கு எதிராக பா.ஜ., - -ம.ஜ.த., பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும் கூறியுள்ளார். எனவே தன்னை முதல்வராக்கினால், சூழ்நிலையை சமாளித்து, பா.ஜ., ஆட்சி காலத்தில் நடந்த முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் எனவும் விளக்கி உள்ளார்.

நல்ல முடிவு

தன்னுடன் மற்ற எந்த தலைவர்களும் இல்லாததால், தனக்கு கிடைத்த இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி, சொல்ல வேண்டிய விஷயத்தை லாவகமாக சொல்லி உள்ளார். துணை முதல்வர் பேச்சை கவனமாக கேட்ட ராகுல், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ஆலோசித்து, நல்ல முடிவு எடுக்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தாராம்.இதற்கிடையில், அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு, நேற்று அதிகாலை சிவகுமார், பெங்களூரு திரும்பினார். கலபுரகிக்கு செல்வதற்கு முன், சதாசிவ நகர் வீட்டில் கூறுகையில், ''ராகுல் எங்கள் கட்சி தலைவர். அவரை சந்திப்பதற்கு, யாருடைய அனுமதியும் தேவையில்லை. ''அமெரிக்காவில் ராகுலுடன் என்ன பேசினேன் என்பதை ஊடகங்களுக்கு எப்படி தெரிவிக்க முடியும். என் தம்பி, மனைவி, மடாதிபதிகளுடன் என்ன பேசினேன் என்பதையும் நான் எப்படி சொல்ல முடியும்,'' என்றார்.

அடுத்த கட்டம்

அதாவது, ராகுலுடன் ரகசியமாக பேசிய விஷயங்களை, பகிரங்கமாக சொல்ல முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அமெரிக்காவில் அரசியல் விளையாட்டு விளையாடிய சிவகுமார், கர்நாடகாவில் தன் அடுத்தகட்ட விளையாட்டை விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.அவருக்கு பதிலடி கொடுப்பதற்காக, சித்தராமையா ஆதரவாளர்கள் மற்றொரு விளையாட்டை விளையாட வியூகம் வகுத்துள்ளனர். ஒரு வேளை முதல்வர் பதவியை இழக்க நேரிட்டாலும், சிவகுமார் அல்லாமல், தன் ஆதரவாளருக்கு வாய்ப்பு கொடுக்கும்படி வலியுறுத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுடன் ஏற்கனவே முதல்கட்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாம்.முதல்வர், துணை முதல்வர் நடத்தும் சதுரங்க விளையாட்டில், காங்கிரஸ் தொண்டர்கள், பிரமுகர்கள் சிக்கி தவிக்கின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

S MURALIDARAN
செப் 19, 2024 16:30

ஆக மொத்தத்தில் மக்கள் பிரச்னை "அம்போ" தான். என்ன ஜனநாயகம் இது. வெட்க கேடு.


Bhaskaran
செப் 19, 2024 07:17

காசு உள்ளவன் முதல்வர் இந்தியா கூட்டணி நியாயம் போலும்


RAMAKRISHNAN NATESAN
செப் 18, 2024 14:48

சிவக்குமார் மீது இனி அமலாக்கமோ கமலாக்கமோ எதுவுமே கைவைக்காது ..... அந்த அளவுக்கு அவர் பாஜகவை கவனித்து விட்டார் ...


Krishnamurthy Venkatesan
செப் 18, 2024 11:29

எல்லாம் பதவி படுத்தும் பாடு. இதில் சிவகுமார் அவர்களும் விதிவிலக்கல்ல.


குமரி குருவி
செப் 18, 2024 10:47

கர்நாடகாவில் விளையாடினால் ஆதாயம் உண்டு அமெரிக்காவில் விளையாடினால்....?


Suresh R
செப் 18, 2024 10:29

Congress wants to trouble for the country and then they want to come to power with external enemies. People power will prevail soon


VENKATASUBRAMANIAN
செப் 18, 2024 08:27

காங்கிரஸில் இதெல்லாம் சகஜம்.


RAMAKRISHNAN NATESAN
செப் 18, 2024 14:47

பிஜேபியிலும் சகஜம் ...... கட்சி வளரும்போது கோஷ்டி பூசலும் வளரும் ....


RAMKUMAR
செப் 18, 2024 04:49

சிவகுமார் , ராகுல் , ஸ்டாலின் அனைவரும் அமெரிக்காவில் = தனி நாடு பிளான் ??? . நாட்டை பிளவுபடுத்த கூடிய கூட்டம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை