உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மும்மொழி கொள்கையை வைத்து தி.மு.க., பிரசாரம் முறியடிக்க அமித் ஷாவுக்கு தமிழக பா.ஜ., யோசனை

மும்மொழி கொள்கையை வைத்து தி.மு.க., பிரசாரம் முறியடிக்க அமித் ஷாவுக்கு தமிழக பா.ஜ., யோசனை

சென்னை; புதிய கல்வி கொள்கையை ஏற்காததால், தமிழகம் இழக்கும் நிதியை, தமிழக மாணவர்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, மத்திய பா.ஜ., அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.'புதிய தேசிய கல்வி கொள்கையை உள்ளடக்கிய, பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், அதற்கான நிதியை வழங்க முடியாது' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது, தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=clts1tmm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஆலோசனை

பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தினால், மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டியிருக்கும். அது ஹிந்தி திணிப்புக்கு வழிவகுக்கும் எனக் கூறி, தி.மு.க., அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 'மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என நிர்பந்திக்கக் கூடாது' என, அ.தி.மு.க., - பா.ம.க., போன்ற எதிர்க்கட்சிகளும் மத்திய பா.ஜ., அரசை வலியுறுத்தி வருகின்றன.இந்த மொழி பிரச்னையை பிரதானமாக முன்னிருத்தி, வரும் 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. மத்திய பா.ஜ., அரசு ஹிந்தியை திணிப்பதாகக் கூறி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பாக, தி.மு.க., தொண்டர்களுக்கு தினமும் ஸ்டாலின் கடிதம் எழுதி வருகிறார்.'ஹிந்தி ஆதிக்க மொழி. அது மாநில மொழிகளை அழித்துவிடும். தி.மு.க.,வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுவதற்கு, மத்திய அரசின் கல்வி கொள்கையே காரணம். மத்திய பா.ஜ., அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்குகிறது' என, தன் கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும், மும்மொழி கொள்கைக்கு எதிராக கடிதம் எழுதவும் திட்டமிட்டுள்ளார். தி.மு.க.,வின் இந்த மொழி அரசியலை முறியடிப்பது குறித்து, கடந்த பிப்ரவரியில், சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பா.ஜ., தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

நோக்கம்

இதுதொடர்பாக, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்த மறுப்பதால், அதற்கான நிதியை தமிழகத்திற்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தான், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். ஆனால், அதை வழக்கம் போல திரித்து, கல்விக்கான நிதியையே மத்திய அரசு தர மறுப்பது போல தி.மு.க.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.மாநிலங்களுக்கான நிதியை தர முடியாது என, மத்திய அரசால் சொல்ல முடியாது. அப்படி சொன்னால், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேட முடியும். ஆனாலும், இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று, தீர்வு தேட தி.மு.க., தரப்புக்கு விருப்பம் இல்லை. அதனாலேயே, இந்த விஷயத்தை சட்ட ரீதியில் அணுகாமல் அமைதி காக்கின்றனர். அதே நேரம், இந்த விஷயத்தை திரித்து அரசியல் ஆதாயம் தேடுவது தான் தி.மு.க.,வின் ஒரே நோக்கம். அதைத்தான் தி.மு.க., செய்து வருகிறது. இதை முறியடிக்க, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 5,000 கோடி ரூபாய் நிதியை, தமிழக மாணவர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது 'லேப்-டாப்' போன்ற கல்விக்குத் தேவையான உபகரணங்களை வழங்கலாம் என, அமித் ஷாவிடம் யோசனை தெரிவித்துள்ளோம். நல்ல யோசனை எனக் கூறிய அவர், பரிசீலிப்பதாக கூறியுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Venkatesh
மார் 08, 2025 12:49

உங்கள் சருக்கு மர பாலைவனத்தில் புள் முளைத்தாலும் முளைக்கும் தமிழ் நாட்டில் தாமரை மலராது


Jayavelu Dorai
மார் 07, 2025 12:35

வரும் தேர்தலில் இருக்கும் 4 இடமும் கிடைக்காது.


sagaya Dass
மார் 07, 2025 12:04

ஒரு சிறிய யோசனை நமக்கு மேலை நாடுகளின் விழாக்கள் வேண்டாம், மேலை நாடுகளின் பழக்கவழக்கங்கள் வேண்டாம், மேலை நாடுகளின் கலாச்சார வேண்டாம், அப்படி இருக்கும்போது நமக்கு எதற்கு மேலை நாடுகளின் மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு ,ஜெர்மனி உட்பட அதற்கு பதிலாக பாரத பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் அடிக்கடி கூறுவது போல உலகத்தில் பழமையான மொழி 2500 ஆண்டுகளுக்கு முன்பு உருவான மொழி தமிழ் மொழி அந்த தமிழ் மொழியை வட இந்தியா முழுவதும் ஹிந்தி மற்றும் அவர்களின் தாய்மொழி அடுத்த மூன்றாவது மொழியாக தமிழ் மொழியை ஏற்க சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்குமே செம்மொழிக்குரிய அந்தஸ்தை தமிழ் பெற்று விடுமே இதை செய்ய முன் வருவார்களா


Mahendran Puru
மார் 07, 2025 11:22

அண்ணாமலை பேச்சை கேட்டு இதுவரை கேவலப்பட்டதுதான் மிச்சம். மேலும் ஒரு ஐடியாவா? திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமே அண்ணாமலைதான்.


Mummoorthy Ayyanasamy
மார் 07, 2025 09:26

மாணவர்களுக்கு நேரடியாக பணம் வழங்க மத்திய அரசு முன்வந்தால் அதை வரவேற்கிறேன். நன்றி.


கொங்கு தமிழன் பிரஷாந்த்
மார் 06, 2025 22:54

யோவ் அமித் இவளோ நாள் நீ சொல்லி கொடுத்து பாஜக தமிழ் நாட்டில் தாமரை மலர்ந்து பூத்து குலுங்கும் காட்சி தான் பார்த்தோமே.


आपपावी
மார் 06, 2025 20:48

இந்தி படிச்சா மாசம் 1000 ரூவா வங்கி கணக்கில் வெப்போம்னு சொல்லிப் பாருங்க. முதியோர்கள் கூட சேருவாங்க.


आपपावी
மார் 06, 2025 20:46

இந்தி வாணாம். हिंदी नहीं चाहिए No Hindhi . மும்மொழித் திட்டம் அமலுக்கு கொண்டாந்துட்டேன். காசக் குடு.


Ranganathan
மார் 06, 2025 20:27

அருமையான பதிவு


பாமரன்
மார் 06, 2025 17:44

தமிழக அரசின் கல்வி பட்ஜெட் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் கோடி.... இவனுக டபாய்க்கறது வெறும் ரெண்டாயிரம் கோடி... அதாவது வெறும் ஐந்து சதவீத தொகை... குடுக்கலைன்னா தேர்தல் நேரத்தில் அதையும் நாங்க செலவு செய்றோம்னு சொல்லி டீம்கா ஸ்கோர் பண்ணிடுவானுவ அப்பிடின்னு புரிஞ்சிக்கிட்டு பகோடா கம்பெனி பேந்த பேந்த முழிச்சிகினே இறங்கி வருது.... போற எடம்லாம் கும்மாங்குத்து குத்துனா தாமரை மல்லாராம போயிட போகுது... கொஞ்சம் மூளைக்காரணுவளையும் கூட வச்சிக்கோங்கய்யா....


கொல்ட்டி பற்றாளன், கட்டுமரநகர் ஓங்கோல்
மார் 06, 2025 21:01

பெரிய மூளைக்காரன்னு உமக்கு நெனப்பு பக்கோடாவை விட்டால் உமக்கு வேறு எதுவுமே தெரியாதா? நீரெல்லாம் கருத்து போடலைனு எவன் அழுதான்? போயா அங்கிட்டு...


சமீபத்திய செய்தி